நாகை, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறி நடந்திருப்பதற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும் சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்காவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் ஆயிரக்கணக்கான திமுகவினர் ஊர்வலமாக இலங்கை தூதரகம் நோக்கி புறப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை கடற்படை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி இலங்கை அரசை மட்டுமல்லாமல் மத்திய அரசையும் முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தாவிட்டால், எங்களது போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என்றார்.
தொடர்ந்து இலங்கை தூதரகம் நோக்கி புறப்பட்ட மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.





லஞ்ச ஊழல் புரையோடிப் போன கனிமொழியும், கருணாநிதியும் இவர்களது கூலிக் கும்பலும் திரும்பவும் பதவிக்கு வருவதற்கு நன்றாக நாடகமாடுகிறார்கள். தமிழர்களே ஏமாறாதீர்கள்.