Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெப்ரவரி 18 – பெப்ரவரி 27. காலனித்துவ ஆட்ச்சிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகிய நாம் ஏனைய உலக காலனித்துவ ஆட்ச்சிகளால் பாதிக்கப்பட்ட மக்களுடன் விழிப்புணர்ச்சி கவனயீர்ப்பு நிகழ்வாக பெப்பரவரி 18 தொடக்கம் பெப்ரவரி 27 வரை ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றது

இன்று உலக மக்களின் நலன்கள் உலகமயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எமது போராட்டமும் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் போராட்டமாக மக்கள் எழுச்சி கொண்டு நாடுகளை அசைத்து கொண்டிருகிறார்கள். இந்த போராட்டத்தில் நாம் எம்மையும் இணைத்து கொண்டு எமது விடுதலையை அழித்த அரசுகளிடம் எமது உரிமையையும், நிலத்தையும் கேட்கவேண்டிய நேரமிது.

பிரித்தானிய காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட நாம் இன்று சிங்கள இனவெறி காலனித்துவ ஆட்ச்சி முறையில் சிக்குண்டு இனப் படுகொலை செய்யப்படும் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு பெப்ரவரி மாதம் தமிழரின் சரித்திரத்திலேயே தமிழரின் உரிமை பறிக்கப்பட்ட நாளாகவே எழுதப்படவேண்டும்.

இந்த மாதத்தை காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் விழிப்புணர்ச்சி மாதமாக பார்க்கப்படவேண்டும். அதன் அடிப்படையில் காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பகிர்ந்து கொண்டு அடுத்து ஒடுக்கப்பட்ட இம் மக்களுக்கு என்ன செய்யமுடியும் என்பதைப் பார்க்கும் தளமாக நாம் பார்க்கலாம்.

காலனித்துவ ஆட்சியாளர் களுக்கு எதிரான வாரம் பெப்ரவரி 18 ஆம் திகதி மாலை 6 மணிக்கு Colonal Fabien metro நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கம்யூனிஸ் கட்சி தலைமைப் பணிமனையில் பல அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பன்நாட்டு அமைப்புக்களின் முன்னிலையில் ஆரம்பித்து வைக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து 19ம் 20ம் திகதிகளில் ; Bellevilliose ,19 -21 Rue Poyer, Paris 75020 Metro Gambetta என்னும் இடத்தில் கண்காட்சி, புத்தக வெளியீடுகள், புத்தகக் கண்காட்ச்சிகள் இடம் பெறும். சனிக்கிழமை மதியம் 1.00 மணி தொடக்கமும் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் பன்நாட்டு மக்களின் கண்காட்ச்சி இடம்பெறும்.

23ம் திகதி புதன்கிழமை பரிஸ்2 மாநகரசபையில் (8 Rue de la Ba,que Metro Bourse) மாலை 6.30 மணிக்கு தமிழரின் இனப்படுகொலை நடைபெற்று 18 மாதங்களின் பின்னர் என்ற தலைப்பில் ஒரு புகைப்படக் கண்காட்ச்சியும் அதனைத் தொடர்ந்து விவாத கருத்துப் பரிமாறலும் இடம்பெறும்.

பெப்ரவரி 25ம் திகதி Metro Starsbourg St Denis இல் அமைந்துள்ள குருதிஸ்தான் மக்களின் கலாச்சார மண்டபத்தில் (12 Rue Enghein) நாடுகள் அற்ற தேசிய இனங்களின் சமையில் காலனித்துவ ஆட்சியால் தமது நிலங்களை இழந்த மக்கள் ஒன்று கூடி தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பரிமாற்றம் செய்வதோடு மட்டும் அல்லாமல் இன்று மக்கள் பல நாடுகளில் எழுச்சி அடைந்துள்ள நிலையில் நாடுகள் அற்ற தேசிய இன மக்கள் தென் சூடான் போல் தமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் தினமாகவும் அதை நடைமுறைபடுத்த அரசியல் முயற்சிகள், மக்கள் எழுச்சிகளை உருவாக்கும் தளமாகவும் இது அமையும்.

பல இன மக்களுக்கு இடையிலான விவாதம், கலாச்சார பரிமாற்றம் செய்யப்பட்டு அடுத்து எமது நிலை என்ன. எமது விடுதலையை எவ்வாறு பார்க்கிறோம் என்றும் விடுதலையை தேடிக்கொண்டிருக்கும் பல்லின மக்கள் தம்மை தேசிய இனமாக உலகிற்கு காட்டுவதும் இந்த தேசிய இனத்துக்கு தம்மை தாமே ஆளும் உரிமை இருக்கிறது என்பதையும் அன்று வலியுறுத்தப்படும்.

பெப்ரவரி 26ம் திகதி மாபெரும் ஊர்வலமாக 60 ற்கு மேற்பட்ட பிரான்சு அரசியல் கட்சிகளும், மனிதநேய அமைப்புக்களுடன் இனவெறி ஒடுக்கு முறைக்கு எதிராக மக்களின் ஜனநாயக விருப்புக்களுக்கு மதிப்பளிக்கும்படி கேட்டு மாலை 15.00 மணிக் Place de la Republic இல் இருந்து பிரான்ஸ் ஆட்ச்சிபீடத்தை நோக்கிய போராட்டம் நடைபெற உள்ளது. இதில் நாம் பெருமளவில் கலந்து கொண்டு அழிவுகளுக்கு இடையில் இருந்தும் நாம் விழிப்பாக இந்த உலகத்துடன் நியாயம் கேட்டு உலக மக்களாகிய நாம் நீதி கேட்டு போராடவேண்டிய நேரத்தில் உலக மக்களுடன் சேர்ந்து எமது வாழ்வுரிமையை வலியுறுத்துவோம்.

26ம் திகதி இந்த தேசிய இனங்கள் பன்நாட்டு அரசு, அரச சார்பற்ற அமைப்புக்கள் சூழ மாபெரும் ஊர்வலமாக Place de la Republic இல் இருந்து ஆரம்பித்து பிரான்ஸ் ஆட்ச்சி பீடத்திற்கு சென்று எல்ல இனமக்கள் சார்பாக மகஜர் கையளிக்கப்படும்.

தமிழீழத்தை நோக்கிய பாதையில் இவ் வாரப் போராட்டம் மிக முக்கியமானதாகும். கடந்த 30 வருடமாக தனித்து நின்று எமது வலிகளை பகிர்ந்து கொள்ள முடியாமல் எம்மை அரவணைக்க எவரும் அற்ற நிலையில் இருந்த நாம் இன்று பல பன்நாட்டு அமைப்புக்கள் அரச, அரசசார்பற்ற அமைப்புக்கள் எமது போரட்டத்தின் நியாயத்தை உணர்ந்து எமது விடுதலைக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து எம்மை அவர்களுள் ஒருவராக எமது விடுதலைக்காக எம்முடன் பயணிக்க தயாராக இருக்கும் போது பிரான்சில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந் நிகழ்வுகளில் பங்கு கொண்டு எமது விடுதலைக்கான பாதையில் பயணிக்க வேண்டியது முக்கியமாகிறது, இந்த மாற்றத்தை நாம் எமக்கு சாதகமாக பயன்படுத்தி பெரும் திரளாக நாம் இந்த ஊர்வலத்தில் பங்கடுக்க வேண்டியது முக்கியம்.

இன்று எம்மை அரவணைத்துச் செல்ல பலர் வந்திருப்பது எமக்கு நம்பிக்கை தருகிறது. நாம் எல்லோரும் ஒன்றாக எழுந்து நிற்கும் போது விடுதலையின் வேகம் அதிகரிக்கிறது. இவ்விதம் பன்நாட்டு மக்கள்; சேர்ந்து உலக மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுக்கும் போது அதிகாரத்தில் உள்ளவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகும்.

எமது விடுதலைக்கான போராட்டம் பல வழிகளிலும் தொடரும்.....

நாளை மலர விருக்கும் தமிழ் ஈழத்தில் எமது உறவுகள் சந்தோசமாக வாழ நாம் எல்லோரும் இன்று ஒன்றாக செயல் படுவோம்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

தொடர்பு- 06 15 88 42 21

மின்னஞ்சல் -

mte.france@gmail.com

0 Responses to பிரான்சில் காலனித்துவ ஆட்ச்சிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து சுயநிர்ணய உரிமை வலியுறுத்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com