Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நாம் தமிழர் இயக்க கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அவர், ‘’இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இறக்க காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி. தி.மு.. தலைவர் கருணாநதி கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் முடியும் தருவாயில் குடிசை வீடுகளை மாற்றி காங்கிரட் வீடுகள் கட்டி தருவதாக கூறுகிறார். இந்த திட்டத்தை முன்பே செய்திருக்க வேண்டும். ஆட்சி முடியும் தருவாயில் தற்சமயம் அறிவிக்கிறார்.

தி.மு.. ஆட்சியில் தெருவில் நூலகங்கள் இல்லை. ஆனால் தெருக்கள் தோறும் பிராந்தி கடைகள் (டாஸ்மாக்) உருவாகியுள்ளன. வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆனால் 60 அடி ஆழத்திற்கு பொக்லைன் கொண்டு மணல் அள்ளுகிறார்கள்.

இவ்வாறு மணல் அள்ளுவதால் குடிநீர் திட்டமும் அடியோடு பாதிக்கிறது. மேலும் விவசாய விளை நிலங்களின் உற்பத்தியும் பாதிக்கிறது. இந்தியாவில் ஒரு லட்ச விவசாயிகள் பட்டினியால் இறக்கிறார்கள். ஆனால் மத்திய அரசின் உணவு கிடங்கில் உணவு பொருட்கள் மக்கி மக்களுக்கு பயன் படவில்லை.

பாராளுமன்றத்தில் தமிழக மீனவர்கள் இறந்தால் இந்தியன் இறந்து விட்டார் என கூறுகிறார்கள். தமிழன் இறந்து விட்டதாக யாரும் கூறவில்லை. காங்கிரஸ் கட்சி காமன் வெல்த் ஊழல், பீரங்கி ஊழல், 2ஜி ஸ்பெக்டரம் போன்ற ஊழலில் சிக்கி திணறுகிறது.

காங்கிரஸ் கட்சி நமக்கு எதிரி. காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க நாம் தமிழர் இயக்கத்தினர் வீடு வீடாக சென்று தேர்தலில் கை சின்னத்திற்கு ஓட்டளிக்க கூடாது என மக்களிடத்தில் தெளிவாக பிரசாரம் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியை தேர்லில் தோற்கடித்து விட்டு இதே இடத்தில் மீண்டும் வெற்றி கூட்டங்கள் நடத்துங்கள்’’என்று பேசினார்.

0 Responses to தமிழன் இறந்துவிட்டால் இந்தியர் இறந்துவிட்டார் என்று கூறுகிறார்கள்: சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com