Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தோழமை மையம் ஏற்பாடு செய்திருந்த "நாடுகடந்த தமிழீழ அரசு ஏன்" எனும் தலைப்பிலான கருத்தரங்கம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

பெப்ரவரி 4 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பேராசிரியர் சரஸ்வதி அவர்கள் தலைமை தாங்க, பெரியார் தி.. தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு, திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர்,கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராஜன், மருத்துவர் எழிலன், அய்யநாதன், டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் உரையாற்றினர்.

நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள், இணையவழி தனது வாழ்த்துரையை, தோழமை மையத்துக்கு வழங்கினார்.

தலைமை உரையாற்றிய பேரா.சரஸ்வதி அவர்கள், தோழமை மையம், நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக தளத்தையும் , அங்கீகாரத்தையும் இந்திய அளவிலும் அதற்கு அப்பால் உலகம் அளவிலும் பெறுவதற்காக பாடுபடும் என்றார்.

தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அதன் செயற்பாடுகளையும் விளக்கினார்.

ஊடகவியலாளர் அய்யநாதன் அவர்கள் தனதுரையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தக்கு அங்கீகாரத்தின் முதல்படியாக, தெற்கு சூடானில் கிடைத்திருப்பது போல்;, இந்தியாவிலும் அதனைப் பெற நாம் போராடவேண்டும் என்று கூறினாhர்.

நிகழ்வின் சிறப்புரையாக அமைந்த தலைமை அமைச்சர் விசுவநாதன் உருத்திரகுமாரனின் உரையில், கட்சி அமைப்பு வேறுபாடுகளைக் கடந்து ஈழவிடுதலைப் போராட்டம் தனது இலட்சியத்தை அடைய, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பல்படுத்த அனைவரும் அணிதிரள வேண்டும் என கூறியதோடு சிங்கள படைகளால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக் மீனவர்களின் சம்பவங்கள் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பின் தொடர்சியே என குறிப்பிட்டார்.

ஐரோப்பா, அமெரிக்கா, ஒஸ்றேலியா என பலநாடுகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளுகளுக்கும் விரிவுபடு;த்தியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.





0 Responses to தமிழகத்தில் "நாடுகடந்த தமிழீழ அரசு ஏன்" கருத்தரங்கம் (காணொளி, படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com