உலகத் தமிழரை உலகிலே தலை நிமிர வைத்த எங்கள் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை இத்தரணியிலே ஈன்றெடுத்த புனிதத்தாயின் உயிர் இன்று உலகைவிட்டுச் சென்றாலும் தமிழினம் உள்ளவரை எல்லோருடைய நெஞ்சங்களிலும் என்றுமே வாழ்ந்துகொண்டிருப்பார்.
அன்னாரது குடும்பத்தினருக்கும் பார்வதியம்மாவின் மறைவுச் செய்தி கேட்டுத் தாங்கொணாத் துயரில் ஆழ்ந்திருக்கும் உலகத் தமிழர்களுக்கும் கனடியத் தமிழர் தேசிய அவையினர் தங்களது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் தாங்களும் இத்துயரில் பங்குகொள்கின்றனர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
கனடியத் தமிழர் தேசிய அவை



0 Responses to தேசியத் தலைவரின் தாயார் பார்வதியம்மாவுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் இரங்கல்