Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்நாட்டில் அரசியல் கலப்பில்லாத பொதுஅணி ஒன்று உருவாக்கப்படவேண்டும். ஈழப்பிரச்சனை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சனை. சினிமா நடிகர்களுக்கு பிரச்சனை என்றால் சினிமா நடிகர்கள் சங்கம் உள்ளது. அது போன்று தொழிலாளர்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தொழிலாளர் சங்கங்கள் உண்டு. அதுபோல ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை அணுகுவதற்கு பொதுவான அரசியல் கலப்பில்லாத அணி தேவை என நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாவின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது நடிகர் சத்தியராஜ் இதனை தெரிவித்தார்.

வன்னிக்காட்டுக்குள் சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்து திரும்பிய வைகோ அவர்களின் கதைகளை கேட்டே தமிழீழ விடுதலைக்கான பணியில் இணைவதற்கான ஆர்வம் ஏற்பட்டது என நடிகர் சத்தியராஜ் மேலும் தெரிவித்தார்.

1 Response to ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் அரசியல் கலப்படமற்ற பொதுவான அணி தேவை: சத்தியராஜ்

  1. ஈழததமிழர் நாம் எதிர்பார்ப்பதும் அதுவே. அசிங்க அரசியல் கலப்பில்லாத ஈழ ஆதரவாளர் அணி ஒன்று உருவாக வேண்டும். மாநில மத்திய அரசாங்கங்களை தட்டிக் கேட்கக் கூடிய பலம் மிக்கதொரு அணி உருவாகவேண்டும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com