Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் இலங்கை உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் அரசியல் குழப்பங்களை உருவாக்க முயற்சிப்பதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திவயின சிங்கள நாளிதழின் தலைமை ஆசிரியரை தமது மாளிகைக்கு அழைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எகிப்திய ஜனாதிபதி பதவி விலகியதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ஷ நோய்வாய்பட்டுள்ளதாக அண்மையில் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள ஜனாதிபதி திவயின பத்திரிகையின் தலைமை ஆசிரியரை அழைத்து தாம் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதை நிரூபித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் அழைக்கப்பட்டிருக்கும் போது ஜனாதிபதி அலரி மாளிகையில் அவரது புதல்வருக்காக பொறுத்தப்பட்ட உற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அருகில் இருந்த தொலைக்காட்சியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எகிப்திய விவகாரம் குறித்து உரையாற்றும் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

இவை அனைத்தும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக இருக்கலாம் என லங்கா நிவ்ஷ் வெப் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் போது அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளில் குழப்பங்களை தோற்றுவிக்க முயற்சித்து வருவதாகவும் எனினும் அவர்கள் அமெரிக்காவுக்கு எதனையும் செய்யவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறான ஒரு நிலைமை இலங்கையில் வரவிட மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to எகிப்தின் நிலைமை எம் நாட்டுக்கு வாறது: மகிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com