டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ள போதிலும், சிறீலங்கா அரசாங்கத்திற்கு நேரடியாக அவர் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.
நாகபட்டினம், காரைக்காலைச் சேர்ந்த 106 கடற்றொழிலாளர்கள் சிறீலங்கா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், "தமிழக கடற்றொழிலாளர்களை சிறீலங்கா கடற்படை பிடித்து சென்றமை கண்டிக்கத்தக்கது என பதிலளித்துள்ளார்.
தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பி சிறீலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா ஏற்கனவே தனது கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில், தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக மகன்மோகன் மேலும் தெரிவித்தார்.



0 Responses to தமிழக மீனவர் கைது - சிங் கண்டனம்