உங்களுடைய தமிழீழ தேசிய அடையாள அட்டையை இன்றில் இருந்து இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்!.என நாடுகடந்த தமீழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.அன்பான தமிழீழ மக்களே...
தமிழீழ தேசிய அடையாள அட்டை கடந்த பொங்கல் தினத்திலிருந்து (ஜனவரி 14, 2011) எம்மால் வினியோகிக்கப்படுகின்றது.
ஆனால் அன்று எல்லா புலம்பெயர்ந்த தமிழர்களாலும் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
அனைவரும் அதனை பெற்றுக்கொள்ள வசதியாக இணையத்தளத்தில் அவ் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம்.
உங்களிடம் தமிழீழ தேசிய அடையாள அட்டை இல்லாதவிடத்து www.tgte-us.org என்ற இணைய முகவரியின் முகப்புப் பக்கத்தில் அடையாள அட்டையின் படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
அதன் பெறுமதி $15 மட்டுமே.
இவ் அடையாள அட்டையை நாம் பெற்றுக்கொள்வதன் மூலம் எமது வரலாறு மற்றும் தேசியத்தை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும். தமிழீழ தேசிய அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு சில வாரங்களிலே அனுப்பி வைக்கப்படும்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
(ஐக்கிய அமெரிக்கா)
www.tgte-us.org



தேச அட்டை வழங்கும் முறையை இன்னும் எளிமை படுத்துங்கள். விவரம் தெரிந்த எனக்கே பெறுவதில் சிரமமாக உள்ளது. அதில் பணம் செலுத்தும் முறையை எளிமைபடுத்துங்கள். காரணம் paypol என்பது எனக்கே தெரிய வில்லை. மற்றபடி debit card , credit card இவை எல்லாம் எல்லோரிடம் சாத்தியமில்லை. ஏன் என்னிடம் கூட இல்லை. எனவே தயவு செய்து பணம் அனுப்பும் முறையை எளிமையாக்குமடி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
வால்டேர் வில்லியம்ஸ்
கத்தார்