அது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ முடிவுக்கு வந்துள்ளது என்பதை யாரும் மாறுக்க மாட்டார்கள். ஆனால் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை வெகு சுலபமாக முடிவுக்கு கொண்டுவரலாமென, சிறிலங்கா அரசோ அல்லது அதற்கு தற்பாதுகாப்பு கொடுத்து உதவும் அரசோ, இவற்றுடன் தமது சுயநலத்திற்காக ரகசியமாகவும் வெளிப்படையாகவும் இணைந்து நின்று செயல் திட்டங்களுக்கு வடிவம் கொடுக்கும் நபர்களும் எண்ணுவார்களெயானால், இவர்களை போல் வேறு மிலேச்சர்கள் உலகில் இருக்க முடியாது.
முழுப் பூசானிக்காயை சோற்றுக்குள் புதைப்பது போல், உண்மைகளை மறைப்பதற்காக, ஊடகவியலாளர்களை தாக்குவதும், கொலைசெய்வதும் பத்திரிகைகள், இணையதளங்கள், ஊடகங்களை தமது நாசகார வேலைகளினால் செயலிழக்கச் செய்வதை, பண்பு மாரியாதை தெரிந்த கூட்டம் ஒரு பொழுதும் ஈடுபடமாட்டாது.
கடந்த ஒரு சகப்தங்களாக, தமிழீழ விடுதலைப் போராட்டம், பல சிறந்த நடிகர்களை சந்திந்தது. இவ் நடிகர்கள, தமது நடிப்பு திறமையினால், சில பங்களிப்பை தம்மாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு செய்ய முடியுமென கூறி, இணையதளம், பத்திரிகையென வெளியிட்டனர்.
ஆனால் இவர்களின் வேலைத்திட்டங்கள் யாவும் தம்மை பயிற்றுவித்த ஏஜமான்களுக்கு பலன் கொடுக்கக்கூடிய முறையிலேயே நடைபெற்றது. புகைப்படங்கள் யாவும் ஓவ்வொருவரையும் அடையாளம் கண்பிப்பதற்காகவும் கட்டுரைகள் யாவும் இரட்டைக் கருத்துக்களுடன் தமது ஏஜமான்களுக்கு தகவல்கள் கொடுக்கும் முறையில் அமைந்தது.
இப்படியான நபர்கள் மிகக் கூறுகிய காலத்திலேயே உலகில் சகல நாடுகளிலும் தொடர்புகளை ஏற்பத்தி தமது ஏஜமன்களில் வேண்டுகோளுக்கு இணங்க தமக்குள் ஓர் சிநேகிதமான குழுவையும் ஏற்படுத்திக் கொண்டனர். இறுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தம்மால் முடியுமானளவு வாய்கரிசியையும் போட்டு தமது வெற்றிகரமான சேவைகளுகளுக்கு தமது எஜமான்களின் பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டனர்.
ஆனால் இவற்றுடன் இவர்களது ஏஜமான்கள் திருப்பதிப்பட இல்லை இவர்களையும் ஒதுங்கி வாழ விடவும் இல்லை. இப்பொழுது இவர்கள் சேவையானது வெளிப்படையானது மட்டுமன்றி இவர்களை அவர்களது நண்பர்கள் தோழர்களுடனேயே மோத வைத்துள்ளனர்.
இவ் நடிகர்கள் இப்பொழுது பல விதப்பட்ட நாசகார வேலைகளை அரசுகளின் உதவியுடன் செய்ய ஆரப்பித்துள்ளனர். இதன் ஒரு அங்கமாகவே பல தமிழ் இணையதளங்கள் விசேடமாக ஈழம்ஈநியூஸ் இணையதளம் முற்றாக செயழிழந்துள்ளது. ஆனால் நாசகாரிகள் இதன் மூலம் உண்மை செய்திகளை மக்களிடம் சென்று அடையாமல் செய்துவிடலாமென நினைப்பது முழு முட்டாள் தனம்.
அரசாக இருந்தாலென்ன, தனி நபர்களாக இருந்தலென்ன, ஒவ்வொருவராலும் தம்மால் முடிந்ததையே செய்ய முடியும். அரசுக்களுடன் இணைந்து செயற்படும் இந்த நடிகர்கள் தமக்கு தெரிந்த தொழிலையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறர்கள். “பத்தையில் உள்ளவர்களை மெத்தையில் ஏற்றுவது மிக கடினம்”. ஆகையால் நாம் தொடர்ந்து எமக்கு தெரிந்த வேலைகளை விடமுயற்சியுடன், மிக விழிப்புடன் செய்வதே சாலச் சிறந்தது.
தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினாராகிய நாம் எமது பல சர்வதேச தோழமை அமைப்புக்களுடன் இணைந்து ஈழம்ஈநியூஸ் இணையத்தளம் மீதான நாசகார வேலை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.
வணக்கம்
ச.வி. கிருபாகரன்
பொதுச் செயலாளர்
தமிழர் மனிதர் உரிமைகள் மையம்
பிரான்ஸ்
09-02-2011



0 Responses to ஈழம்ஈநியூஸில் வெளிவரும் யாதர்தமான செய்திகளை கண்டு சகிக்க முடியாவில்லையா? – தமிழர் மனிதர் உரிமைகள் மையம்