அவர் மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக டுபாயில் எண்ணெய் தொழிலில் ஈடுபட்டுள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
லிபியத் தலைவர் மற்றும் அவர் சார்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ள அவர், இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சஜிந்தவாஸ் குணவர்தன ஆகியோருடனும் நெருங்கிய உறவினைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளின் ஊடாக அரசாங்கத்தின் இரகசிய வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகள் அனைத்தும், அவரின் ஊடாகவே மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
அவரின் ஊடாகவே நேற்றைய தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், லிபியத் தலைவருக்கான ஆதரவை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




0 Responses to கடாபிக்கும் மகிந்தாவுக்கும் இடையிலான முகவர் யார்?