மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், லெப்.கேணல் கெளசல்யன், மற்றும் வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் உட்பட இம்மாததில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களையும், "தேசத்தின் பேரன்னை" பார்வதியம்மாவினதும் நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெற்றது.
(26-02-2011) சனிக்கிழ்மை இலக்கம் 31, பஸ்கால் ட்றைவ், மெட்போர்ண், மில்ட்டன் கீன்ஸ் எனும் முகவரியில் அமைந்துள்ள "மெட்போர்ண் கொமியூனிட்டி ஸ்போட்ஸ் பவிலியன்" மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
பொதுச்சுடரினை மாவீரரான முன்னாள் மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்களின் சகோதரன் வி.தர்மலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து இதுவரை காலமும் போரினால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காகவும், தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து ஈகைச்சுடரினை மாவீரரான தமிழீழ மருத்துவப் பொறுப்பாளரான லெப்.கேணல் தமிழ்வாணன் அவர்களின் சகோதரி ம.சாந்தினி அவர்கள் ஏற்றிவைக்க, வான் கரும்புலிகளின் திருவுருவப் படத்திற்கு மாவீரரான மேஜர் ஆசா அவர்களின் சகோதரி எஸ்.சிவாசினி அவர்கள் மலர்மாலையினை அணிவித்தார். அதைத்தொடர்ந்து "தேசத்தின் பேரன்னை" பார்வதியம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாவீரரான லெப்.கேணல் இளநிலா அவர்களின் சகோதரன் எஸ்.மூர்த்தி அவர்களும், மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான் மற்றும் லெப்.கேணல் கெளசல்யன் ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மாவீரர்களான லெப்.குகன், லெப்.ரகு ஆகிய மாவீரர்களின் சகோதரன் சு.சிவகுமார் அவர்கள் மலர்மாலையினை அணிவித்தனர்.
இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கான மலர்மாலையினை மாவீரர்களான 2-ம் லெப்.அசோக், வீரவேங்கை காந்தன் ஆகிய மாவீரர்களின் சகோதரன் சுரேஸ் அவர்கள் மலர்மாலையினை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
அதைத் தொடர்ந்து நிகழ்வுகளாக நடனம், கவிதைகள், நினைவு உரைகள், சிறுவர்களின் குழுப் பாடல்கள், சிறப்புரை, கவியரங்கம், எழுச்சி கானங்கள், என்பன இடம்பெர்றன.
இந்த நிகழ்வில் மில்ட்டன் கீன்ஸ் பகுதி மக்கள் மட்டுமன்றி அருகாமையில் உள்ள் அவேறு பல நகரங்களையும் சேர்ந்த பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
நம்பிக்கை ஒளி, மற்றும், பிரித்தானியத் தமிழர் பேரவையின் அறிவிப்புகளும் மக்களுக்கு நிகழ்வினூடாக தெரியப்படுத்தப் பட்டிருந்தது.
இதில் சிறப்பாக சிறுவர்களின் பேச்சும், கவிதை, மற்றும் குழுப்பாடல்கள் என்பன சிறப்பாக அமைந்திருந்தது. அத்தோடு இந்த நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தினால் விடுக்கப்பட்ட செய்தி ஒன்றும் மக்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாலை 6:30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு இரவு 10:00 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.















0 Responses to பிரித்தானியாவில் நடைபெற்ற வீரத்தாயின் வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)