Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்தாவின் சகோதரர் பசில் நிதி மோசடி?

பதிந்தவர்: தம்பியன் 17 February 2011

இந்த மாதம் 25ம் திகதி திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் ஆரம்ப திகதி ஒத்தி வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சோதனைக்கால செயற்பாடுகளில் பல குறைபாடுகள் அவதானிக்கப்பட்டமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

அங்கு இதுவரையில் பயன்படுத்துப்பட்டு வந்த எண்ணெய்க்கு பதிலாக, நிலக்கரி பயன்படுத்த ஆரம்பித்த வேளையில் இந்த பாதிப்பகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் இவற்றை சீர் செய்வதற்கும் மேலும் மில்லியன் கணக்கான நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அங்கு நிர்மானிக்கப்பட்டுள்ள நினைவு கல்லில் தமது பெயரை பொறிக்க வேண்டாம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வேளைத்திட்டம் தோல்வியை சந்திக்கும் என்பதைலேயே இந்த தீர்மானத்தை அமைச்சர் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த வேலைத்திட்டத்தை அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்று நடத்திய காலப்பகுதியில், பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இதற்காக சீன நிறுவனம் வழங்கிய பொருட்களுக்கு பதிலாக, உத்தரவாதம் அற்ற தரம் குறைந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது.

இதன் விளைவாகவே தொடர்சியாக நுரைச்சோலை நிலக்கரி மின்சார உற்பத்தி நிலையம் குறைபாடுகளுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to மகிந்தாவின் சகோதரர் பசில் நிதி மோசடி?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com