Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதுரையில் இலங்கை அரசின் தேசிய கொடியை எரித்த 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 106 மீனவர்களை சிறைபிடித்து வைத்துள்ள இலங்கை கடற்படை, இன்று மீண்டும் புதுச்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 24 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளது. மேலும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும் இலங்கை கடற்படை தாக்கியுள்ளது. இதில் அவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்து, மதுரையில் இந்திய இளைஞர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் ராஜன், மாவட்டச் செயலாளர் மணிமுத்து தலைமையில் 25 பேர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசின் தேசியக்கொடியை எரித்தனர்.

இலங்கை அரசின் தேசிய கொடியை எரித்ததற்காக போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீதும், மதுரை திடீர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

மதுரையில் இன்று காலை நடந்த இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சிறிது நேரம் பதட்டமாகவும் காணப்பட்டது.

0 Responses to மதுரையில் இலங்கை தேசிய கொடியை எரித்தவர்கள் கைது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com