ஐக்கிய நாடும் -நவீன உலகமும் என்ற தலைப்புக்கு உரையாற்ர வருகை தந்திருந்த ஜக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கி மூன் முன்னிலையில் சிறிலங்கவின் சுதந்திர நாளாகிய இன்று பெர்லின் வாழ் தமிழீழ உணர்வுள்ள மக்கள் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களுக்கு நீதி கோரி கவனயீர்பு நிகழ்வு முன்னெடுத்தார்கள்.இவ் கவனயீர்ப்பு நிகழ்வில் , தமிழ் மக்களுக்கு நடைபெறுகின்ற மனிதஉரிமைமீறல்கள், இனஅழிப்புக்கு ஐக்கிய நாடுகள் பதில் கூறவேண்டும் என்றும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு நிரந்திரமான அரசில் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்றும் வாசகங்கள் எழுதிய பதாதைகள் மக்களால் தாங்கப்பட்டிருந்தன. அத்துடன் இந்த நவீன உலகத்தில் ஜக்கிய நாடுகள் சபை கண் முன்னே உலக வல்லரசுகளின் துணையோடு ஸ்ரீலங்கா இனவெறி அரசால் தமிழ் மக்களுக்கு நடந்தேறிய இன அழிப்பை மற்றும் தமிழ் மக்களுக்கான விடிவிக்காய் எந்த ஒரு வல்லரசுகளின் சுயநல கொள்கைக்கும் இசைந்து போகாமல் முன்னெடுக்கப்பட்ட புனித விடுதலை போராட்டத்தை பயங்கர வாதிகள் என்னும் போர்வையால் முறியடிக்கப்பட்டதை விளக்கும் துண்டுபிரசுரங்களும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது
அத்தோடு ஜக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கி மூன் ஆற்றிய உரையில் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பாகவும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பிலும் பெர்லின் மக்கள் பிரதிநிதி வித்தியா ஜெயசங்கர் உள்பட அத்தோடு எமக்கு சார்பாக குரல் கொடுப்பதுக்கு இடது சாரி கட்சியின் மனித உரிமைகளுக்கான விவகாரங்களுக்கு பொறுப்பான யேர்மன் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களின் இரு அரசியல் ஆய்வாளர்களும் கலந்துகொண்டனர்.
உலக சமாதானத்தையும் மேன்மையும் வளர்ச்சியையும் தமது அடிப்படை குறிக்கோள் என்று குறிப்பிட்டு அத்துடன் உலகத்தில் எங்கு எந்த மக்களுக்கு அநீதி நடைபெற்றாலும் ஐக்கிய நாடுகளின் சபை விரைந்து சென்று குரல் கொடுக்கும் என்று கூறுகையில் வித்தியா ஜெயசங்கர் அவர்கள் எழுந்து நின்று கேள்வி கேட்க முயன்ற போது அவர்களை ஜக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான்கி மூன் அவர்கள் தெரிந்தும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை .
ஜக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான்கி மூன் அவர்கள் உரை முடிந்த பின் வழங்கப்பட்ட கேள்வி -பதில் நேரத்திலும் ஐந்து கேள்விகள் மட்டும் ஏற்று கொள்ளப்படும் என்று கூறியபோதும் அதிலும் வித்தியா ஜெயசங்கர் அவர்கள் உட்பட மூன்று பேர்கள் மட்டும் கேள்விகள் கேக்க நின்றும் அதில் இருவர் இரு கேள்விகளும் ஒருவர் ஒரு கேள்வியும் கேக்க அதிலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது இங்கே குறிப்படக்தக்கது ,
ஜக்கிய நாடுகள் சபை உலகின் சனநாயகத்துக்கு பாடுபட தம்மை அர்ப்பணித்து சேவை செய்யும் , குரல் நசிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் என்று கூறும் பான் கி மூன் அவர்கள் இங்கே இப்படி நடந்தது வேதனை அளிகின்றது என்றும் அத்தோடு உண்மையில் தான் அங்கே கேட்க இருந்த கேள்வியால் கூடி இருந்த ஊடங்கங்களுக்கும் உலக நாடுகளின் தூதரகங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உண்மைமுகத்தை காட்டுவதுக்கு அமைந்திருக்கும் என்று கூறினார் .
நிகழ்வின் முடிவில் ஜக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்கள் பேரூந்தில் எம்மை பார்த்து கடந்து செல்லும் நேரத்தில் சிரித்து கொண்டு கை காட்டியது கூடி நின்ற எம் மக்களை கவலைக்கும் ஆத்திரத்துக்கும் ஆக்கியது . இவ்வாறான அரசியில் நிகழ்வுக்கும் இப்போதைய சூல்நிலையில் மிக குறைவான மக்கள் கலந்து கொண்டது கவலைக்குரியது .
ஸ்ரீலங்கா இனவெறி அரசு நேரடியாக யேர்மன் அரசாங்கத்திடம் தொடர்பு கொண்டு எமது இன்றைய கவனயீர்ப்பு நிகழ்வை பொய் பிரச்சாரத்தின் ஊடாக முறைப்பாடு செய்து தடுக்க முயன்றது கவனயீர்ப்பு நிகழ்வுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரியால் எமக்கு அறிவிக்கப்படது.அத்துடன் அவர் கூறுகையில் யேர்மன் நாட்டின் சட்டங்களை மதித்து இவ்வளவு காலமும் ஈழத்தமிழர்கள் நாம் அனைத்து போராட்டங்களையும் நிகழ்த்துகிறோம் என்றும் தாம் தொடர்ந்தும் இப்படியான கண்டன ஊர்வலங்களை நிகழ்வுகளை மதிப்போம் ஆதரவு தருவோம் என்றும் உறுதிஅளித்தார்.
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை



0 Responses to பான்கி மூன் யேர்மன் வருகை முன்னிட்டு - தலைநகரத்தில் கவனயீர்ப்பு