கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது காணாமல் போன ஊடகவிலாளர் பிரகீத் எக்னலிகே தொடர்பில், அவரது மனைவி சமர்ப்பித்த கடிதம் கிடைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.சபையின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்ஸ்கீ இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தின் பிரதி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கடிதம் தொடர்பில் மேலதிக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் எந்த பகுதியில் ஒரு ஊடகவியலாளர் காணாமல் போனாலும், அது கண்டனத்துக்கு உரிய செயலே என அவர் தெரிவித்துள்ளார்.



0 Responses to காணாமல் போன பிரகீதின் தொடர்பில் மனு கிடைத்தது: ஐ.நா பேச்சாளர் மார்ட்டின்