Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவுக்கு முந்திய அரசாங்கங்கள் விடுதலைப் புலிகளுடன் போர் புரிய விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று முன்னை நாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அண்டன் ஜெயநாதன் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக விடுதலைப் புலிகள் பாரியளவிலான குற்றச் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்ட போதிலும் இராணுவம் மற்றும் பொலிசார் அதற்கெதிராகச் செயற்படுவதற்கு அன்றைய அரசாங்கங்கள் இடமளிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான ஆயுதங்கள் மற்றும் ஆளணி வளங்களை முன்னைய அரசாங்கங்கள் இராணுவத்தினருக்கும் பொலிசாருக்கும் வழங்கவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் அரசியல் இருப்பையே பாதுகாத்துக் கொள்ள முயன்றார்கள்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஐவன் பொதேஜு உள்ளிட்ட நானூறு பொலிசார் விடுதலைப் புலிகளுடன் போர் புரிய அனுமதி கேட்ட போது அதனை மறுத்த அன்றைய அரசாங்கம் அவர்களைச் சரணடையும் படி உத்தரவிட்டது. அதன் காரணமாக அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் காரணமாக நாடு முப்பது வருடங்கள் பின்னோக்கிச் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 Responses to விடுதலைப் புலிகளுடன் முன்னைய அரசாங்கங்கள் போருக்கு விரும்பியிருக்கவில்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com