தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் மறைவையடுத்து யாழ்.குடாநாடு சோகத்தில் மூழ்கியுள்ளது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.யாழ். குடாநாட்டில் போக்குவரத்து சேவைகள், மக்கள் நடமாட்டம் என்பன குறைந்து காணப்படுகிறது.
யாழ்.நகரப் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
பார்வதி அம்மாளுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்தும், தமிழ் நாட்டிலிருந்தும் பல தமி பிரமுகர்கள் வருகை தரவுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் திரு சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக தெரியவருகிறது.



0 Responses to தலைவரின் தாயார் பார்வதி அம்மாளுக்கு மக்கள் அஞ்சலி! யாழ்.குடாநாடு சோகத்தில் மூழ்கியுள்ளது