Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசியத் தலைவனைப் பெற்றெடுத்த "தேசத்தின் பேரன்னை" பார்வதி அம்மாளுக்கு விடைகொடுக்கும் இறுதி வணக்க நிகழ்வு இன்று (22-02-2011) பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.

பிரித்தானியத் தலைநகர் லண்டனின் New Broadway, Ealing, W5 2BY எனும் பகுதியில் உள்ள "EALING TOWN HALL" Prince மண்டபத்தில் மிகப் பெரிய அளவில் "தேசத்தின் பேரன்னை" க்கு இறுதிவணக்க நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.

தமிழர்களின் தலைவனாய், தமிழீழத் தேசியத் தலைவனாய் தமிழர்கட்கு வழிகாட்டியான எமது அற்புத தலைவனை பெற்றெடுத்த பெருந்தகை "தேசத்தின் பேரன்னை" பார்வதி அம்மாளுக்கு ஈழத் தமிழர்களால் மட்டுமன்றி உலகத் தமிழர்களாலும் செய்யப்படவேண்டியது அவரை கெளரவித்து இறுதி வணக்க நிகழ்வை மிகப் பெரிய அளவில் நடாத்தி அனைத்துத் தமிழர்களும் அணி அணியாக, அலை அலையாக் திரண்டு மலர் தூவி அவருக்கான இறுதி வணக்கத்தை செலுத்துவதே ஆகும்.

அந்த வகையில் இன்று (22-02-2011) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ள இறுதி வணக்க நிகழ்வில் அனைத்து தமிழர்களையும் உணர்வோடு கலந்துகொண்டு அவருக்கான இறுதி வணக்கத்தை செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

எனவே இந்த நிகழ்வில் தமிழர்களுக்கு எவ்வளவு உரிமையும், கடமையும் உள்ளதோ அதைவிட அதிகம் தமிழ் ஊடகங்களுக்கும் உண்டு.

அதனால் உலகெங்கும் இன்று நடைபெறும் "தேசத்தின் பேரன்னை" பார்வதி அம்மாளின் இறுதி வணக்க நிகழ்வை நேரலை வாயிலாகவோ அன்றி பதிவுகள் செய்தோ தமது ஊடகங்கள் வாயிலாகவும் வெளிக்கொண்டுவந்து தமது வரலாற்றுக் கடமையை செய்ய வேண்டும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.



0 Responses to இன்று தாயகத்தில் தேசத்தின் பேரன்னைக்கு இறுதிவணக்க நிகழ்வு நடைபெறும் அதே வேளை பிரித்தானி​யாவிலும் நடைபெறுகிற​து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com