Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதானது, புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியைக் காட்டுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதி சூழலையும் அபிவிருத்தியையும் கட்டியெழுப்பி வருகின்ற நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றியம் தற்போது புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இந்த திருப்பம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது அரசியல்வாதிகள் சிலர் ஐரோப்பாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டதை அடுத்தே ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் இத்தடையை நீக்கியிருந்தது என்பதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் எதிர்காலம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் நாட்டு மக்கள் இது விடயத்திலும் சிந்திக்க வேண்டியது முக்கியம் என்றுள்ளார்.

சிறுவர் மற்றும் மகளிர் விவகாரத்துறை உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்ற நிகழ்வொன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to புலிகள் மீதான தடை நீக்கம் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மீண்டும் யுத்தத்திற்கு தயாராவதைக் காட்டுகிறது: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com