Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று காலமும் சூழலும் மாறி கொண்டு இருக்கின்றது.இன்று அமெரிக்காவில் ராஜபக்சவின் போர்க்குற்றங்களுக்கு எதிராக வழக்கு,பிரிட்டனில் வழக்கு,லட்ச தமிழர்களை படுகொலை செய்து மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலி கம்பிகளிக்குள் அடைத்து வரலாறு காணாத கொடுமைகளை புரிந்த ராஜபக்ச வீழ்வது உறுதி.தம்பி பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பிறப்பது உறுதி.நல்ல செய்திகள் வந்து கொண்டு இருகின்றான்.நம்பிக்கையோடு இருங்கள் தமிழீழம் பிறப்பது நிச்சயம், என்றார் மதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்.

இன்று(26.2.11) கரூரில் "அலைவரிசை யார் கைவரிசை"? என்ற தலைப்பில் நடந்த மாபெரும் பொதுகூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய நாஞ்சில் சம்பத் அவர்கள்,அண்ணா வளர்த்தெடுத்த கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு வெறும் பதவிக்காகவும் பணத்திற்காகவும்,சோனியாவிடம் கையேந்தி நிற்கிறது திமுக. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1,76,000 கோடியை கொள்ளை அடித்தவர் கருணாநதி.இனத்துரோகி கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கும் கி.வீரமணி பெரியாரின் கொள்கைகளை கருணாநிதியிடம் குறைந்த விலைக்கு விற்றவர்.இந்த இனத்துரோகி, ஊழல் பெருச்சாளிக்கு ஆதரவளித்து பேசி வரும் சுப.வீரபாண்டியன்,ஜகத் கஸ்பர் போன்றவர்களை தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்றார்.இந்த துரோகிகளின் அணிக்கு எதிராக மதிமுக,பெரியார் திராவிட கழகம் போன்ற அமைப்புகள் கைகோர்த்து நிற்கின்றன.

நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியில், நடிகர் விஜயகாந்த்,விஜய், என்று வலுவான வெற்றி கூட்டணியாக உருவெடுத்துள்ளது.இந்த கூட்டணி தமிழ் நாட்டின் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி விட்டது.கருணாநிதி சிறைக்கு செல்வது உறுதி என்று நாஞ்சில் சம்பத் பேசினார். முன்னதாக பேசிய கரூர் மாவட்ட செயலாளர் பரணி மணி அவர்கள் ஈழ தமிழர்களை காட்டி கொடுப்பதற்கு இத்தாலி சோனியாகாந்தி கருணாநிதிக்கு கொடுத்த கூலி தான் இந்த 1,76,000 கோடி என்று சாடினார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக நடைபெற்ற "சமர் பா" குமரனின் ஈழம் தொடர்பான எழுச்சி பாடல்கள் எல்லோரையும் கவர்ந்தது.நிகழ்ச்சிக்கு மதிமுக கரூர் நகர செயலாளர் திரு.N.P.K.பாலமுருகன் தலைமை தாங்கினார்.மதிமுக தணிக்கை குழு உறுப்பினர் திரு.பூங்கொடி சாமிநாதன்,அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் திரு.சீனிவாசபெருமாள், ஆரத்தியாபொன்னுசாமி,திரு.கபினிசிதம்பரம்,கலையரசன்,ஆசை சிவா,ஈழபாரதி,J.P.செல்வம்,கல்யாணி பாஸ்கர் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.










3 Responses to தமிழீழம் நிச்சயம் பிறக்கும் - யாழ்ப்பாணத்​தில் புலிக்கொடி பறக்கும் - நாஞ்சில் சம்பத் (படங்கள்)

  1. இளமாறன் தமிழ்நாடு‍

    ராஜீவ் காந்தி மரணம், விடுதலைபுலிகள் காரணம் என்றும், திமுக உடந்தை என்று‍ம் கூறப்பட்டது‍, பின்பு ஜெயலலிதாவின் ஆட்சி. விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டு‍ம் என்று‍ மிகவும் தீவிரமாக செயல்பட்டு‍, ஜெயலலிதா இந்திய அளவில் அதற்கு‍ தடை கொண்டு‍ வந்தார். காங்கிரே‌ஸ் கட்சி புலிகளுக்கு‍ எதிராக தடை கோரி இருந்தார்களேயானல், அது‍ ஏற்றுக் கொள்ள கூடியது‍. ஆனால், ஜெயலலிதா, ராஜிவ் மரணத்தினால் தான் ஆட்சியை பிடித்தார், புலிகளால் அவருக்கு‍ எந்த நேரத்திலும் எந்த நஷ்ட்மும் இல்லை, இருந்தும் புலிகளின் மேல் அப்படி‍ ஒரு‍ வெறுப்பு , பகை. அவரால் ஏற்ப்பட்ட புலிகளின் மீதான தடை. இதை வைத்து‍ தான் இலங்கை உலகளவில் ஒவ்வொரு‍ நாட்டிலும் புலிகளின் மீது‍ தடை பெற முடிந்தது, புலிகளுக்கு‍ இது‍ எவ்வளவு பெரிய பின்னைடவு. இதை வைகோ. மற்றும் பலர் மறந்து‍ விட்டு‍ , அவருடன் கூட்டு‍ சேர்ந்து‍ …... இது‍ போல் மீண்டு‍ம் ஒரு‍ முறை ஆட்சி இழந்தது‍ தி‍மு‍க. எப்பொழுதல்லாம் விடுதலை புலிகளுக்கு‍ பகிரங்கமாக (வாயளவில் கூட தான்) ஆதரவு அளித்தாலும், ஜெயலலிதா கூக்கு‍ரலி்ட்டு‍ அறிக்கை விடுவார். சுப. தமிழ்ச்செல்வனின் இறப்புக்கு‍ கூட இறங்கல் கடிதம் எழுத கலைஞருக்கு‍ உரிமை இல்லை .இப்படி‍ இருக்க, விடுதலை புலிகளின் தீவிர, பகிரங்க ஆதரவாளர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து‍ விட்டார். மேலும், மதிமுக, பாமாக இந்திய கம்யுனிஸ்ட் இலங்கை தமிழர்களின் தீவிர ஆதரவாளர்கள் (என்று‍ காட்டி‍ கொள்பவர்கள்), இலங்கை தமிழர்களுக்காக இந்த கட்சிகள் போராட்டம் நடத்தினால சிறு‍ கூட்டமே வருகிறது‍ , ஆனால் கட்சி சம்பந்தப்பட்ட கூட்டம் என்றால் , அதிக கூட்டம் வரும். அது‍ எப்படி. ஆகவே , கருணாநிதியை மட்டும் குறை கூறுவது‍ தவறு. எந்த கட்சியையும் நம்ப மு‍டியவில்லை. மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1,76,000 கோடியை கொள்ளை அடித்தவர் கருணாநிதி என்று‍ கூறும் நாஞ்சில் சம்பத் நேரில் பார்த்தது‍ போல் சொல்கிறார். கருணாநிதியை இனத்துரோகி என்று‍ சொல்லும் நாஞ்சில் சம்பந்த (மதிமுக) அவர்கள் தான் இனத்துரோகியான ஜெயலலிதாவுடன் கூட்டு‍. யார் இனத்துரோகி என்பதை காலம் விரைவில் தமிழ் மக்களுக்கு‍ தெரிவிக்கும்.

    விரைவில் தமி்ழ் ஈழம் வெல்வோம்
    தற்போது‍ நாடு‍ கடந்த தமிழீழரசுக்கு‍ ஆதரவளிப்போம்.
    தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

    இளமாறன் தமிழ்நாடு‍

     
  2. kannan Says:
  3. unmai enna enpathu purikirathu....but tamilarkalin thagam tamileelam entru tamilnattil irunthukondu sollatheerkal .............because nammalukku mukkiyam sathisandai mattrum politicals partion its right,jeyalalitha solkirar entral avar malayali appadithan anthak kolaiyaligal otherwise says forget we are proud to be tamilns...thank you so much

     
  4. vadi katti muttaalgal. valgha.
    manithargal.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com