Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிட்டம்புவ யக்கல பிரதேசத்தில் வான்படையின் கிபிர் விமானங்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி சற்று முன்னர் விழுந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் 60ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை வான்படை தலைமையகமும் வீரகொல காவல்துறையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

குறித்த கிபீர் விமானங்கள் இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பில் உருவானவை.

கிபீர் போர் விமானங்களை இலங்கை 1995,96 ஆம் ஆண்டுகளில் முதலில் கொள்வனவு செய்தது.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் உக்கிரகட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில் கிபீர் விமானங்கள் படையினரால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன.

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்கு இந்த கிபீர் விமானங்களே பெரிதும் உதவின.

இலங்கை விமானப் படையினரிடம் கிபீர் சி2 மற்றும் சி7 ரக விமானங்கள் ஐந்திற்கும் அதிகமாக கையிருப்பில் உள்ளதுடன் மேலதிக இரண்டு விமானங்கள் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு விமானத்தின் பெறுமதி சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

0 Responses to சிங்களத்தின் இரு கிபீர் விமானங்கள் விழுந்து நொறுங்கின (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com