Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மறைந்த முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் சிலையை காலி முகத்திடலிலிருந்து அகற்றுவதையோ, வேறிடத்திற்கு மாற்றுவதையோ தான் முற்றாக எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கொங்ஹொங் ஹோட்டல் நிறுவனம் ஒன்றினால் காலிமுகத்திடலில் உல்லாச ஹோட்டலொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதால் பண்டாரநாயக்கவின் சிலை அங்கிருந்து இடம் மாற்றப்படலாம் என ஊகங்கள் நிலவுகின்றன.

இது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் கேட்டபோது, இச்சிலையை இடமாற்றுவதற்கு அல்லது அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார்.

இச்சிலையை நிர்மாணிப்பதற்கு மேற்படி இடம் தெரிவு செய்யப்பட்டதற்கு கலை ரசனை, கட்டிட நிர்மாணக் கலை, சிற்பக் கலை விவகாரம் உட்பட பல காரணங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

இது பண்டாரநாயக்கவின் பெயரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான சிந்தனையின் ஒரு பகுதி. இது ஒரு சதியாகும்' என அவர் கூறினார்.

இச்சிலையை இடமாற்றும் திட்டத்திற்கு எதிராக எகிப்து மற்றும் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் நடைபெறுவதைப் போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு தான் ஏன் ஏற்பாடு செய்யவில்லை என பலர் தன்னிடம் தொலைபேசி மூலம் கேட்பதாகவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

சிலையொன்றை இடமாற்றுவதற்கு எதிராக இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தேவை என நான் கருதவில்லை. அது அவசியமானால் ஊழல், வாழ்க்கைச் செலவு உயர்வு, தவறான பொருளாதார முகாமைத்துவம், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் நடத்தப்பட்ட விதம் என்பனவற்றுக்கு எதிராகவே அது நடைபெறவேண்டும் என்றார்.

0 Responses to பண்டாரநாயக்காவின் சிலையை இடமாற்ற சந்திரிகா எதிர்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com