Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

21-2-2011 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தாய் மொழி தின சிறப்பு பொதுகூட்டம்.

தாய் மொழி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாபெரும் பொதுகூட்டம் பல்லடத்தில் 21-2-2011 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

உலகத்தில் இருக்கும் அனைத்து மொழிகளுக்கும் மூத்த மொழியாம் நம் தாய் மொழி தமிழை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், தாய்மொழியின் வாயிலாகத்தான் நம் இனத்தின் அடையாளம் வெளிப்படும் எனவே நாம் அனைவரும் இனி ஆங்கிலம் கலக்காமல் சரளமாக தமிழில் பேச எழுத கற்றுகொள்ள இந்த நாளிலிருந்து உறுதியேற்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களான வழக்கறிஞர் சிவக்குமார்,கோவை கார்வண்ணன்,தடா ராசா, இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களான வழக்கறிஞர் ராசீவ் காந்தி, பேராசிரியர் கல்யாணசுந்தரம், புதுக்கோட்டை ஜெயசீலன், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Responses to தாய் மொழி தினம் சிறப்புரை செந்தமிழன் சீமான் பல்லடம் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com