Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று வடகிழக்கு லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் உள்ள "ட்றினிட்டி சென்ரர்" மண்டபத்தில் நடைபெற்ற வணக்க நிகழ்விலேயே தேசத்தின் பேரன்னைக்கு மலர்வணக்கமும், அஞ்சலிக்கூட்டமும் நடைபெற்றது.

பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரரான லெப். மதிபன் அவர்களின் தாயார் திருமதி.றோஸ் அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து இதுவரை காலமும் போரினால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும், தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து ஈகைச் சுடரினை மாவீரரான லெப்.கேணல் சுடரொளியின் சகோதரன் திரு.தர்சன் அவர்களும், பழமைவாதக் கட்சியின் ஈஸ்ட் ஹாம் பகுதியின் தலைவரான திரு.அக்ரம் அவர்களும் ஏற்றிவைத்தனர். தேசத்தின் பேரன்னையின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலையினை தமிழீழ மாணவர் பேரவைத் தலைவரும், ஸ்தாபகரும், தமிழீழத் தேசியத் தலைவருடன் எழுபதுகளின் முற்பகுதியில் இணைந்து செயற்பட்டவருமான திரு.சத்திய சீலன் அவர்கள் அணிவித்தார்.

தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது. மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்ற அதே வேளை தமிழீழ ஆதரவாளர்களான "நாம் தமிழர்" கட்சியின் தலைவரும், இயக்குனருமான திரு.சீமான், .தி.மு. கட்சியின் பொதுச் செயலாளர் திரு.வைக்கோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான திரு.பழ.நெடுமாறன் ஐயா, விடுதலை ராஜேந்திரன், குளத்தூர் மணி, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரினது ஒலிப்பதிவு செய்யப்பட்ட நினைவுரைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து நிகழ்வுகளாக வாசினி ஜெயக்குமார், வாசினி ஜெயக்குமார், அட்சயா யோகநாதன், சித்திரா ஜெயக்குமார், மருதீசன், விஜய், கந்தப்பு ஆறுமுகம், ஈழத்துக்கவிஞர் சுப்ரமணியம் ஐயா ஆகியோரினது கவிதைகளும், செல்வி.ரெமினா திலகேஸ்வரன், செல்வி. வாசினி தர்சாயினி ஆகியோரின் பாட்டும் இடம்பெற்றது.

நிகழ்வில் தேசத்தின் பேரன்னையின் நினைவு சுமந்த நினைவுரைகளை செல்வி. அபிதா யோகநாதன், சுடரொளி பத்திரிகை ஆசிரியர் .தி.சம்பந்தன், நாடுகடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதி திரு. .கவிராஜ், வி.ஜே. போஸ் (ஈஸ்காம் பகுதி வர்தக ஒருங்கிணைப்பாளர்), துரை (ஈஸ்காம் பகுதியின் கென்சவற்றி உறுப்பினர்), பெரியார் திராவிடக்கழகத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்வில் சிறப்புரையினை தமிழீழ மாணவர் பேரவைத் தலைவரும், ஸ்தாபகரும், சத்திய சீலன் அவர்கள் ஆற்றினார்.

மாலை 6:30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு இரவு 10:00 மணிக்கு இனிதே நிறைவுபெர்றது. இந்த நிகழ்வில் வடகிழக்கு லண்டனை சேர்ந்த பெருமளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு தேசத்தின் பேரன்னைக்கு தமது வணக்கத்தை செலுத்தியதை காணமுடிந்தது.










0 Responses to ஈஸ்ட் ஹாம் பகுதிவாழ் மக்களினால் "தேசத்தின் பேரன்னை" க்கு வணக்க நிகழ்வு (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com