Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று காலை விமானப்படை விமானங்கள் மோதி வீழ்ந்து கிடந்த இடத்தில் சிதறிக்கிடந்த தேங்காய்களைப் பொறுக்கிக் கொள்வதற்காக விமான விபத்தையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் முண்டியடித்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தின் போது ஒரு விமானம் தென்னந்தோட்டமொன்றில் வீழ்ந்து நொறுங்கியதால் ஏராளம் தென்னை மரங்கள் சேதமுற்றிருந்தன. அதன் காரணமாக தேங்காய்களும் நாலா பக்கமும் சிதறிக் கிடந்தன.

விமான விபத்தைப் பார்வையிட வந்த பொதுமக்கள் தேங்காய்களைக் கண்டதும் விமான விபத்தையே மறந்தவர்களாக சிதறிக்கிடந்த தேங்காய்களைப் பொறுக்குவதற்காக முண்டியடித்தனர். ஒருத்தரையொருத்தர் தள்ளி வீழ்த்திக் கொண்டனர்.

தேங்காய்களுக்காக சண்டையிட்டுக் கொண்ட பொதுமக்களை பொலிசாரினாலும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக அங்கிருக்கும் எமது விசேட செய்தியாளர் குறிப்பிடுகின்றார். இலங்கையின் பொருட்களின் விலை அதிகரிப்பால் தேங்காய்களும் அதிக விலையில் விற்கப்படும் நிலை காரணமாகவே பொதுமக்கள் அவ்வாறு தேங்காய்களுக்காக மோதிக் கொண்டதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் விபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்த போதும் பொதுமக்கள் அவரைப் பார்ப்பதில் பெரும் ஆர்வம் காட்டவில்லை என்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to இரண்டு கிபீர் நாசமாக போய்விட்டதென்றும் கூட பார்க்காமல் தேங்காய் பொறுக்கிய சிங்களவர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com