அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரட்சினைகளுக்கு ஒரே நாளில் தீர்வுகண்டுவிட முடியாது என இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் கூறி இருக்கிறார். எனவே தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பதனை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உரேயொரு அரசியல் சக்தி என்பதனையும் இந்த அரச தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு அரசுடன் இருக்கின்ற எந்த ஒட்டுக் குழுக்களையும் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கவில்லை தமிழ் தேசிய கூட்டமைப்புடனேயே சேச்சுவார்த்தை நடாத்துகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தடையாக இருக்கின்ற எந்தத் தீர்வையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது. தமிழ் மக்களின் அரசியல் பலம் அதிகரிப்பதனைப் போன்று கல்வியிலும் நாம் முன்னேற வேண்டும் கடந்தமுறை நடைபெற்ற இலங்கை நிருவாக சேவைப் பரீட்சையில் தமிழ்மொழி பேசுகின்ற எவரும் சித்தியடையவில்லை என்பது மிகுந்த வேதனையாக இருக்கின்றது. சேர் பொன் ராமநாதன் அருணாசலம் போன்றோர் இந்த நாட்டின் தலைவர்களாக சகல இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார்கள் என்பதனை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும் கல்வியில் அவர்கள் சிறந்து விளங்கியதாலேயே அவ்வாறு தலைவர்களாக திழ்ந்தார்கள் எனவே எமது சமுதாயம் கல்வியில் முன்னேற வேண்டும் இதற்கு அனைவரும் பாடுபடவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பா.அரியநேத்திரன் அவர்கள் உரையாற்றும்போது.,
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிலபேர் வடக்கு கிழக்கு என்ற பிரதேசவாதம் கூறுகிறார்கள் இதை இவர்கள் விடுத்து வடக்கு கிழக்கு எமது தாயகம் என்ற உணர்வுடன் தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரே அணியில் அணிதிரளவேண்டும் நாம் வெறுமனே தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை பற்றிப் பேசுவதால் எந்ந பயனும் இல்லை வடக்கு கிழக்கு எமது தேசிய தாயகம் என்பதனை நிலைநாட்ட ஒரே அணியில் அனைவரும் ஒன்றுபடவேண்டும் உலகில் உள்ள பல கழகங்கள் ஒன்றுபடுவதைப் போன்று தாயகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் தேசிய உரிமையைக் கட்டிக்காப்பதற்கும் விடுதலை அடைவதற்கும் வேண்டிய பணிகளில் இறங்கவேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மென்மேலும் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் உரையாற்றினார்.



0 Responses to தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காத எந்தத் தீர்வையும் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது