இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம், பாரிய ராஜதந்திர முனைப்பை மேற்கொள்ளவுள்ளது.
இதன் அடிப்படையில் அரசாங்கம், இலங்கைக்கு எதிரான இந்த அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்க இந்தியா, பாகிஸ்தான். மலேசியா. ஆபிரிக்கா, லத்தீன் அமரிக்கா மற்றும் அணிசேரா நாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பவுள்ளது.
இந்த தகவலை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
தமிழீழ விடுதலைப்புலிகளின் சக்தியை குறைப்பற்காக இலங்கை இராணுவத்தைப் பயன்படுத்தியது தொடர்பில் இந்த விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக கோத்தாபய குறிப்பிட்டுள்ளதுடன் இலங்கையின் ஆதரவு நாடுகளான வீட்டோ அதிகாரத்தைக் கொண்டுள்ள சீனா மற்றும் ரஸ்யாவிடமும் ஐக்கிய நாடுகள் சபை மட்டத்தில் பாதுகாப்பு கோருவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்டு விமான தாக்குதல்கள், அரசியல்வாதிகளின் கொலைகள். தற்கொலை தாக்குதல்கள். பொதுமக்களை கொலை செய்தமை போன்றவை, பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ நடவடிக்கை தொடர்பில் வெள்ளை அறிக்கை ஒன்று தயாரிக்கப்படவுள்ளது.
அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து அதில் குறிப்பிடப்படவுள்ளது.
இந்தநிலையில் இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டதும் பின்னர் அதன் காரணமாக வன்னியில் இருந்து மக்கள் வெளியேறியமை தொடர்பில் இந்த வெள்ளை அறிக்கையில் விளக்கமளிக்கப்படவுள்ளது.
இந்த வெள்ளை அறிக்கையை தயாரிப்பதற்காக ஏற்கனவே வெளிநாட்டு செயலாளர்களான நிஹால் ரொட்ரிக்கோ, பேனாட் குணதிலக்க, எச் எம் ஜி எஸ் பலியக்கார ஆகியோர் சட்டமா அதிபருக்கு உதவியளிக்கவுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தன்று பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக பாரிய எதிர்ப்பை காட்டவேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச, தமது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களிடம் அவர் இந்தக்கோரிக்கையை நேற்று விடுத்துள்ளார்.



0 Responses to தொழிலாளர் தினமான மேதினம்- பான் கீ மூனுக்கு எதிரான தினமாகிறது