Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பல்வேறு வல்லரசு நாடுகளின் உதவியுடன் இனவெறி பிடித்த இலங்கை அரசு சர்வதேச போர் விதிகள் அனைத்தையும் மீறி ஒரு பாரிய இனப்படு கொலையினை முள்ளிவாய்க்காலிலே அரங்கேற்றியது.

60 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டு வந்த இனவெறித் தாக்குதலின் உச்சக் கட்டமே முள்ளிவாய்க்கால் படுகொலை.

தமிழரின் சுதந்திரத்திற்காய் நெஞ்சினிலே குண்டேந்தி சுதந்திர விடியலை தினமும் கனவு கண்டு எமது மண்ணிலே பல்லாயிரம் மாவிரர்களுடன் மக்களும் விதைக்கப்பட்டார்கள். தினமும் எமது அடுத்த சந்ததியின் விடியலுக்காய் விதைக்கப்பட்ட இந்த உயிர்களின் தியாகங்கள் அளவிட முடியாதது. இந்த அளப்பெரிய தியாகங்கள் கனவுகள் அனைத்தையும் முள்ளிவாய்க்காலிலே புதைக்க நினைத்தது இலங்கை அரசு. இங்கு தான் உலகத் தமிழர்கள் அனைவரது கனவும் கருக்கப்பட்டது.

தாயக மண்ணிலே ஒவ்வொரு உயிர்களும் விதையாக விழும் போது சுதந்திரத்தையே கனவாக கொண்டு புதைந்தார்கள். இவர்கள் எமக்காகவும் எமது அடுத்த சந்ததியினற்காகவுமே தங்கள் உயிர்களை தியாகம் செய்தார்கள். தாங்கள் மண்ணிலே வீழ்ந்தாலும் நாங்கள் கைவிடாது உறுதியுடன் போராடி அனைவரது கனவுகளையும் நனவாக்குவோம் என்ற கனவுடனே தாயக மண்ணிலே வாழ்ந்து இறுதிவரை போராடி தமது மூச்சை நிறுத்திக் கொண்டார்கள்.

எனவே விடுதலைக்காய் விதையான அந்த உயிர்களின் தியாகங்களைக் கௌரவிக்கு முகமாக முள்ளிவாய்க்கால் தினத்திற்காக இன்றிலிருந்தே தயாராவோம்.

அத் தினத்திலே எமதினத்தை கருவறுத்த அந்த கொடிய சிங்கள இனவெறி பிடித்த அரசிற்கு எமது கனவு நனவாகும் மட்டும் நாம் உறங்கப் போவதில்லை என்பதை அடித்துக் கூறுவோம்.

எமது மண்ணிலே விதைக்கப்பட்ட மக்களின் கல்லறைகளின் மீதும் அந்த வெந்தணலின் மீதும் சபதமெடுத்து, எமது தாயகத்தினை வென்றெடுக்க புதியதொரு பரிமாணத்துடன் புறப்படுகின்றோம் என்பதை உலகிற்கு உரத்துக் கூறுவோம்.

சுடுகலங்களினாலும் எறிகணைகளினாலும் எரிகுண்டுகளினாலும் கருவிலே அழிக்கப்பட்டும் உயிருடன் புதைக்கப்பட்டும் தாயகக் கனவுடன் உயிர் நீத்த எமது இனத்திற்கு நீதி கிடைக்கு மட்டும் இனவெறி பிடித்த அரசை விடப் போவதில்லை என்பதை உறுதியுடன் கூறுவோம்.

போர் விதி முறைகளை மீறி இன அழிப்பினை மேற்கொண்ட இலங்கை அரசையும் அதற்கு உறுதுணையாய் நின்றவர்களையும் சர்வதேச குற்றவாளிக் கூண்டிலே நிறுத்துவோம்.
எமது மண்ணிற்காய் விதையாகிய அந்த வீரர்களை தேசிய நினைவெழுச்சி நாளில் வணங்கி கௌரவிப்பது போல, எமது மண்ணிலே விடுதலைக்காய் பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கி சுதந்திரக் கனவுடன் விதையாகிய அந்த உயிர்களையும் கௌரவிக்கும் நாளாக முள்ளிவாய்க்கால் தினத்தினை பிரகடனப்படுத்துவோம்.

இந்த நினைவு நாளை முன்னெடுக்கின்ற அமைப்புகளை நாடி எமது உறவுகளை கௌரவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வோம்.

நன்றி
பிரித்தானியாவில் இருந்து
றொபேட்
btguna@yahoo.com

0 Responses to விதைக்கப்பட்ட மாவீரர்கள் மற்றும் மக்களின் கனவினை நனவாக்க புலத்திலே வாழும் நாம் முள்ளிவாய்க்கால் தினத்திலே சபதமெடுப்போம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com