இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
கடந்தகாலங்களில் இலங்கையின் யுத்தக்குற்றங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளை, இந்தியாவும், சீனாவும் தலையிட்டு தடுத்துள்ளன.
எனினும் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையிலேயே இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இந்த நிலையில், தற்போதேனும், இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை மீதான குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு, மன்னிப்பு கோருவதுடன், இலங்கை அரசாங்கத்தை அநாவசியமாக பாதுகாப்பதை தவிர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to இந்திய ஈழத் தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: பழ நெடுமாறன்