Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அன்பான சகோதரரே எமது ஈழ விடுதலைப் பயணத்தின் சரித்திரத்தில் மறக்கவோ மறைக்கவோ மறுக்கவோ முடியாத ஒரு நாள். முள்ளிவாய்க்காலை மையமாகக் கொண்டு எமக்கெதிராக நடந்தேறிய கொடூரக் கொலைகள நினைவு கூரும் நாள்.

இத் தினத்தில் ஈழத் தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் தமது சரி. தமது இனத்தை அளிக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட கொடூர கொலைகளிலே துடியாய்த் துடித்து மடிந்த
ஆயிரமாயிரம் சகோதரரை நினைவு கூருகின்றோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளிலும் மகிந்தரின் கொடூர அடக்குமுறை ஆட்சியும் சூழ்ச்சியும் பல் முறை அதிகரித்து விட்டது. ஊடக சுதந்திரத்தை நசுக்கி எதிரிகளை வெருட்டி பொய்களை அதிகரித்து உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் சண்டித்தன அரசியலை நடாத்த முயற்சிக்கின்றார்.

ஒரு புறத்தில் தனது கொடூரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சரணடைந்த போராளிகளுக்கு நீதியோ நிவாரணமோ வழங்காது அதற்குரிய பணத்தை வட கிழக்கை சிங்கள புத்த மயமாக்குவதிலும் சிங்கள இராணுவத்தின் நிரந்தர அடிமை ஆட்சி அமைப்பதிலும் செலவிடுகின்றார்.

மறு பக்கத்தில் தமிழின அழிவிற்கும் கொடூர கொலைகளுக்கும் நிதியாலும் ஆயதத்தாலுமுதவிய நாடுகள் நிறுவனங்கள் மத்தியிலும் தமது சுயநல திட்டத்தில் ஏமாற்று முயற்சியையும் சண்டித்தனப் போக்கையும் கையாள முயலுகிறார்.

உண்மை நீதி அடிப்படையில் தனது குற்றங்களை நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டுமென்பதை எதிர்க்கிறார். தப்பு வழிகளைத் தேடுகிறார்.

அன்பான சகோதரரே!

இது புலம் பெயர் தமிழரின் தருணம். எம் மண்ணையும் மக்களையும் காக்க நாமும் மனித மாண்புடன் வாழ எல்லோரும் துணிவுடன்; அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய தருணம்.

சர்வதேசம் எமது நேர்மையான கோரிக்கைகளையும் தங்களது கடந்த கால தப்புக் கணக்கையும் உணரத் தொடங்கியிருக்கின்றன. இத் தருணத்தை தவற விடுவது எமது இனத்தின் தற்கொலையாகும்.

இவ்வளவையும் தெரிந்தும் அறிந்தும் எம் மண்ணிற்கும் மக்களுக்கும் எதிரான அழிவை இக் கொடூர ஆட்சி நடாத்த விடாது நாம் ஆவன செய்ய வேண்டும். தாயகத்தில் தவிப்போருக்கு எமது உதவிக் கரங்களை நீட்டுவோம்.

கருத்தொற்றுமையில் இணைவோம்! இலட்சிய ஒற்றுமையில் திரள்வோம்! செய்ய வேண்டிய பணிகளை திறமைக்கேற்ப அமைப்பின் அணுகு முறைக்கேற்ப புரிந்துணர்வுடன் போட்டியின்றி பகிர்ந்து செய்வோம்!.

எம் மண்ணையும் மக்களையும் காக்கும் ஒரே நோக்கிற்காக எமது பல் வேறு திறமைகளையும் அமைப்புகளையும் அணிவகுத்து ஒரே திசையில் பயணிப்போம்!.

வாருங்கள்! சேருங்கள்! செயற்படுங்கள்!.

பணி. எஸ். ஜே. இம்மானுவேல்

0 Responses to முள்ளி வாய்க்கால் இரண்டாவது நினைவு நாள் மே 18 2011

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com