Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மே 18 போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக மாலை 17.30 மணிக்கு மலர்வணக்கத்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் 500க்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது அதிகளவில் தமிழ் இன உணர்வாளர்கள் இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர். நோர்வே ஈழத்தமிழர் அவையின் தலைவர் வைத்தியர் பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்கள் நோர்வே மொழியில் உரையாற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அவரது உரை தமிழ் ஈழத் தனியரசு ஒன்றே தமிழர்களுக்கான நிரந்த அரசியில் தீர்வாக அமையும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தது. நோர்வே வெளிவிவகாரக் குழுவில் அங்கம் வகிப்பவரும், வலது சாரிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான பேட்டர் கிட்மர்க் உரையாற்றும்போது, ஐக்கிய நாடுகள் மன்றின் சிறிலங்காவின் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை பற்றி குறிப்பிட்டு உரையாற்றியிருந்தார்.

அத்துடன் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இன்றுவரை தமிழ்மக்கள் மீதான படுகொலைகள் தொடர்கின்றன என்பதைக் எடுத்துக்கூற மறக்கவில்லை. தொடர்ந்து தொழிற்கட்சியின் உப தலைவர் மாரிட் நீபக்க மற்றும் இடதுசாரிக்கட்சியை சார்ந்த சிவெயின் யுங்கும் உரையாற்றினர்.

மாரிட் நீபக்க அவர்கள் உரையாற்றும்போது இன்றுவரை தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக தமது சேவைகளை புரிய சிறீலங்காவில் அனுமதி இல்லை என்பதை குறிப்பிட்டதோடு, இன்று சிறீலங்காவில் சிங்களவர்களால் நோர்வே தூதரகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தமிழிலும் மற்றும் நோர்வே மொழியிலும் கவிதைகள் வாசிக்கப்பட்டன. சிறிலங்கா அரசின் இனஅழிப்புக்கு எதிராக நோர்வேயில் மேற்கொள்ளப்பட்ட வழக்குத்தாக்குதல் பற்றி நோர்வே ஈழத்தமிழ் அவையின் பிரதநிதிகளால் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக நோர்வே ஈழத்தமிழர் அவை இனஅழிப்புக்கு எதிரான அரசியல் செயற்பாடுகள் அமையும் என்பதுபற்றியும் எடுத்துரைக்கப்பட்டதோடு நோர்வே ஈழத்தமிழர் அவை மக்களுடன் மேற்கொள்விருக்கும் சந்திப்பு பற்றியும் அங்கு கூறப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வு இனிதே நிறைவேறியது.

0 Responses to நோர்வேயில் எழுச்சியுடன் நடைபெற்ற மே18

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com