Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெல்ஜியத்தில் நடைபெற்ற மே18 நினைவு நாள். பெல்ஜியத்தில் நடைபெற்ற மே18 நினைவு நாள் அமைதி போராட்டமாக மேற்கொள்ளப்பட்டது மதியம் 14-00 மணி தொடக்கம் 14-30 மணி வரை நடைபெற்றது.

அகவணக்கத்துடன் தொடங்கியது நினைவு நாள் அதனை தொடர்ந்து நினைவு நாளில் கலந்து கொண்ட 150ற்கும் அதிகமான பெல்ஜியம் வாழ் தமிழ் மக்கள் சிறி லங்கா பேரினவாத அரசின் திட்டமிட்ட கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு ஈ செய்தனர்.

அஞ்சலி செலுத்தி வணக்கத்தையும் மலர் மற்றும் அகவணக்கமும் ஏற்றி,
பெல்ஜியம் இடது சாரி ( Linkse Socialist – Antwerpen - Belgium )கட்சியின் தலைவர் புநநசவ உரை நிகழ்த்தினார். ஆதனை அடுத்து ஜரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் Paul Murphy தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துடன் தாங்கள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவாதாகவும் தனது உதவியாளர் Tannia முலம் பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுக்கு தெரிவித்தார்.


இலங்கையில் இது வரை காலமும் நடைபெற்ற இன அழிப்புத் தொடர்பாக உடனடி சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதற்கு ஜரேப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அடங்கிய மனுவும் ஜரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

0 Responses to பெல்ஜியத்தில் நடைபெற்ற மே18 நினைவு நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com