Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் தேசியக் கூட்டமைபை இலங்கை அரசின் சதித்திட்டத்திற்கு துணைபோகவேண்டாமென ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஒரு அவசர வேண்டுகோளை விடுக்கின்றது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு தடங்கல் செய்யவேண்டாம், தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள்!.

சமீபத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட தமிழர் இனப்படுகொலை தொடர்பான அறிக்கையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டிருந்தது. இலங்கை அரசு மிகவும் திகில் அடைந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நடாத்தும் பேச்சுவார்த்தை மூலம் தன்னை பாதுகாக்க முற்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சில சலுகைகளை வழங்குவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விசாரணைக்கு பகிரங்கமாகவும், தெளிவாகவும் ஆதரவு தருவதை தவிர்க்க அரசு முயல்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைபை இலங்கை அரசின் சதித்திட்டத்திற்கு துணைபோகவேண்டாமென ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஒரு அவசர வேண்டுகோளை விடுக்கின்றது.

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்த அரசை எந்தக்காரணம் கொண்டும் காப்பாற்ற வேண்டாம் என்று அந்த அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எழுதிய கடிதத்தில் வேண்டியுள்ளது.

இப்படியான ஒரு சந்தப்பம் மீண்டும் ஒருதடவை கிடைப்பது மிக அரிதென்றும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடும் எந்த அரசின் திட்டத்திற்கும் துணைபோக வேண்டாம் என்றும், இந்த .நா அறிக்கை புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒற்றுமையான கடும் உழைப்பின் காரணமாக வெளிவந்தது என்பதை மறந்து விட வேண்டாம் என்றும் கோரப்பட்டுள்ளது.

தமிழர்களாக பிறந்த ஒரேயொரு காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டும், கற்பழிக்கப்பட்டும், பட்டினிபோட்டு கொலை செய்ததையும், மருத்துவ உதவியை தடை செய்து மக்கள் இரத்தப்பெருக்கினால் இறந்ததையும் நினைவு கூரவேண்டும் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்காக இரண்டு வேண்டுகோளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு பகிரங்க அறிவித்தலை உடனடியாக விடும்படியும் அந்த அறிக்கையில் இரண்டு முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்துமாறும் வேண்டப்பட்டுள்ளது.

01.) முதலாவது அம்சம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாம் சர்வதேச குற்ற விசாரணைக்கு தாம் நிபந்தனையற்ற முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவிக்கவேண்டும் என்றும் தற்போது நடக்கும் பேச்சுவார்த்தையிலோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ இந்த விசாரணை தாமதப்படுத்தலோ அல்லது ரத்துச் செய்யவோ தாம் அரசுக்கு உதவி செய்யப்போவதில்லை என்றும் கூறவேண்டும்.

02.) இரண்டாவது அம்சமாக சர்வதேச சமூகத்திடம் இந்த விசாரணையை வேறு எந்த விடயத்துடனும் இணைக்கவேண்டாம் என்றும் தமிழருக்கு இந்த விசாரணைதான் முக்கிய உரிமை என்றும் கோரவேண்டும்.

என்றும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணைகளுக்கு பங்கம் விளைவிக்க கூடாது

அன்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு!

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் பற்றிய பொறுப்பிற்கான .நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்களின் அறிக்கைக்கு பங்கம் விளைத்தக்கதாக எந்த காரணத்துக்காகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படக்கூடாது என்றும், குறிப்பாக, சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தைகளும் அந்த காரணங்களுக்குள் அடங்கும் என்றும், ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு வேண்டிக்கொண்டுள்ளது. சர்வதேச ஆணைக்குழு ஒன்று சிறிலங்கா போர்க்குற்றங்களை விசாரணை செய்ய அமைக்கப்பட வேண்டும் என்று இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

போரின் இறுதிநாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதை இந்த .நா. அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் பாலியல் வல்லுறவுகள், மருத்துவமனைகளும் பொதுமக்களும் அடையாளம் காணப்பட்டு குண்டுவீசி அழிக்கப்பட்டது, உணவு தடுக்கப்பட்டு மக்கள் பட்டினியால் மரணிக்க செய்யப்பட்டது, மருந்துகள் தடுக்கப்பட்டு மக்கள் இரத்தம் பெருகி இறக்க வழி செய்தது ஆகியவற்றை இந்த அறிக்கை குறிப்பிட்டு காட்டியுள்ளது.

மேலும், கற்றறிந்த பாடங்களுக்கும் மீளிணைதலுக்குமான ஆணைக்குழு சுதந்திரமான ஆணைக்குழு அல்ல என்றும் இந்த .நா. அறிக்கை குறை கூறியுள்ளது.

சிறிலங்கா அரசின் கடுமையாள எதிர்ப்புக்கு மத்தியில் பல சர்வதேச நிறுவனங்களின் முயற்சியின் விளைவாகவே இந்த .நா. அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கிக்கொள்ள வேண்டும்.

சிறிலங்கா அரசுடன் தொடரும் பேச்சுவார்த்தைகளில் சில விட்டுக்கொடுப்புகளுக்கு பதிலீடாக போர்க்குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச ஆணைக்குழு அமைக்கப்படுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுக்க கூடும் என கருதப்படுகின்றது. சர்வதேச ஆணைக்குழு அமைக்கப்படுவதை எவ்வாறாயினும் தடுப்பதற்கு சிறிலங்கா அரசு தீவிரமான முயற்சிகளை செய்துவருவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கிக்கொண்டு, அதற்கு இடங்கொடுக்க கூடாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தைகளில் செய்யப்படும் எந்தவிதமான விட்டுக்கொடுப்புகளுடனும் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச ஆணைக்குழு அமைக்கப்படுவது சம்பந்தப்படுத்தப்பட மாட்டாது என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

சிறிலங்கா அரசுடன் ஏதாவது உடன்பாட்டை முடிவு செய்தவுடன் சர்வதேச சமுகம் எமது விடயங்களில் இருந்து வெளியேறிவிடும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்து கொள்ளவேண்டும். இதனை தவிர்த்து கொள்வதற்காக, எந்தவிதமான உடன்பாட்டுக்கும் சர்வதேச சமுகம் பிணையாளராக செயற்பட வேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுக்க முடியாத கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். எந்தவிதமான உடன்பாடும், சிறிலங்கா அரசு உடன்பாட்டின் அம்சங்களை நிறைவேற்றத் தவறும் போது அதனை கையாள்வதற்கு சர்வதேச சமூகம் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட உத்தரவாதங்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

நன்றி

ஒபாமாவுக்கான தமிழர்கள்

தமிழ் அமெரிக்கர்களின் ஒரு அரசியல் செயற்பாட்டு குழுவான ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு, ஹில்லரி கிளின்ரனையும், பரக் ஒபாமாவையும் அமெரிக்க மக்களாட்சி கட்சியின் வேட்பாளர் தெரிவிலும் பின்னர் 2008 தேர்தலிலும் ஆதரித்தது. சிறிலங்காவின் உள்நாட்டு போரில் இறுதி வாரங்களில் 70.000 க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என நாம் நம்புகிறோம். வெற்றி கொண்ட சிறிலங்கா சிங்களவரின் செயற்பாடுகளை நாம் அவதானித்ததில் இருந்து, இந்த கவலைக்குரிய தீவு இரண்டு நாடுகளாக பிரிவதே தமிழர்கள் அங்கு பாதுகாப்பாக வாழ வழிவகுக்கும் என்ற முடிவுக்கு நாம் வந்திருக்கிறோம்.

1 Response to போர்க்குற்ற விசாரணைக்கு தடங்கல் செய்யவேண்டாம்!: த.தே.கூட்டமைப்பிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள்

  1. இளமாறன் இந்தியா

    ஆமாம் இலங்கை சிங்களவர்களை நம்ப கூடாது. போர் குற்ற குற்றசாட்டுகள் இலங்கை மீது‍ இருந்து‍ கொண்டிருந்தால் தான் தமிழர்களுக்கு‍ அதிகார பகிர்வு கிடைக்கும் இதை த தே கூ‍ புரிந்து‍ எந்த வித நிபந்தனைகளுக்கும் அடிபடியாமல் இருக்க வேண்டும், பேச்சு‍ வார்த்தையிலும் ஈட பட வேண்டும்.இதன் படி‍ ஏமாறாமல் இருந்தால் தான் வருங்காலத்தில் தினி தமிழ் ஈழத்திற்‌க்கு‍ வழி வகை செய்யும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com