Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும் அதன் அரசியல் பிரிவு பலமாக இயங்குவதாக ஏ.எஃப். பி. செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் படையியல் ரீதியாக யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் தனித் தமிழீழம் என்ற அவர்களின் கோரிக்கைக்கான ஆதரவு தென்னிந்தியாவிலும் (தமிழ்நாடு) வெளிநாடுகளிலும் இன்னும் பலமாகவே இருப்பதாக உலகின் முன்னணி செய்திச் சேவைகளுள் ஒன்றாகிய ஏ.எஃப்.பி (AFP) செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து விடுதலைப் புலிகள் பற்றிய புத்தகங்கள் மற்றும் சில பரப்புரைப் பொருள்கள் கொழும்பு துறைமுகம் ஊடாக கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவை கொழும்பிலுள்ள சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட செய்தியின் போதே ஏ.எஃப்.பி. செய்திச் சேவை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அத்துடன் அவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள பிரசுரங்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட முகவரி, கனடாவில் பெறுனரின் முகவரி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பிரஸ்தாப செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, மற்றும் கனடாவிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருப்பதைச் சுட்டிக்காட்டும் இந்த ஊடகம் குறிப்பிட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் மறைமுகமாகத் தெரிவிக்கின்றது.

0 Responses to விடுதலைப் புலிககளின் அரசியல் பிரிவு பலமாக இயங்குகின்றது: ஏ.எஃப். பி. செய்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com