Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வலி சுமந்த மே மாதம் 18 ஐ முன்னிட்டு யேர்மன் தலைநகரில் கடந்த நாட்களாக இறைவன் வழிபாடு, இரத்ததானம்,கருத்தரங்கு, கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

மே 18 அன்று பெர்லின் நகரத்தின் Gedächtniskirche தேவாலயத்தின் முன்றலில் பெர்லின் வாழ் தமிழ்மக்கள் சிங்கள் இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன்,தொடர்ந்து மறுகணம் யேர்மன் மற்றும் பல்லின மக்களுக்கு, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலை பற்றிய துண்டுபிரசுரமும் வழங்கப்பட்டது.

17 .05 . 2011 அன்று Dersimgenozid 37/38 எனும் தலைப்பில் இனப்படுகொலைக்கு எதிராக நடைபெற்ற கருத்தரங்கில் பெர்லின் மக்கள் பிரதிநிதி வித்தியா ஜெயசங்கர் அவர்களும் கலந்து கொண்டு Dersim மக்களுக்கு எப்படி இனப்படுகொலை நடந்ததோ அப்படி தமிழ் மக்களுக்கும் நடந்தது இனப்படுகொலை என்பதை எடுத்துரைத்தார்.

அந் நிகழ்வில் கலந்து கொண்ட பல இனப்படுகொலைக்கு எதிரான அமைப்புகள் நிகழ்வின் இறுதியில் தமிழர்களுக்கு தாம் தம்மால் முடிந்த அளவு ஆதரவு தருவோம் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பல யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை பிதாக்கள் கலந்து கொண்ட இவ் கருத்தரங்கில் தொடர்ந்து வித்தியா ஜெயசங்கர் தனது உரையில், தமிழ் மக்களை படுகொலை செய்த போர்குற்றவாளி தற்சமயம் யேர்மனி, சுவிஸ் மற்றும் வத்திக்கான் நாடுகளின் சிறிலங்காவின் துணை தூதுவராக பதவி வகிப்பது தொடர்பாக கூறுகையில் கலந்து கொண்ட அனைவரையும் திகைக்க வைத்தது.

16 .05 . 2011 அன்று யேர்மனி St . Augustin எனும் நகரத்தில் அராபிய நாடுகளில் நடைபெறும் புரட்சி மாற்றங்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிலும் தமிழ் மக்கள் கலந்து கொண்டு யேர்மன் இடதுசாரி கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் Niema Movassat அவர்களுக்கு ஈழத் தமிழர்களின் பிரச்சனை சார்ந்து யேர்மனி அரசு வகிக்கும் நிலைமை குறித்தும் தமிழ் மக்களின் தற்போதைய அவலநிலைமை குறித்தும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பில் மனு வழங்கினார்கள்.

0 Responses to யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற மே 18 கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com