லண்டனில் உள்ள Greenford Town Hall மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர் திரு. ருத்திராபதி சேகர், பிரித்தானியத் தொழில்கட்சி உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருபவருமான திரு. விரேந்திர சர்மா, மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களான திருமதி. பாலாம்பிகை, திரு. செல்வராஜா, திரு. மனோரஞ்சன் ஆகியோர் ஏற்ரிவைத்தனர்.
தொடர்ந்து ஈகைச்சுடரினை 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினருடனான சமரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர் லெப்ரினன் ஜீவன் அவர்களின் சகோதரி அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச்சுடரேற்றலைத் தொடர்ந்து இதுவரைகாலமும் போரினால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும், தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்விற்காகவும் போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வும், நினைவுரைகள், மற்றும் கவிதைகள் எனபன இடம்பெற்றது. இதன் போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியீடான திரு. சுதன்றாஜ் அவர்களின் எழுத்துருவில் உருவான "தமிழீழத் தேசியத் துக்க நாள் தனிலே தமிழர் நாம் ஒன்றுபடுவோம்" எனும் பாடல் ஒலிக்கவிடப்பட்டது.
இந்த நிகழ்விற்கு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் நகரசபை உறுப்பினர்களும் (MR BIRENDER SHARMA MP EALING AND SOUTHALL (LABOUR), MR JULIAN BELL COUNCIL LEADER FOR EALING COUNCIL, MR JAMES ALLIE BRANT COUNCILLOR ALSO CANDIDATE FOR 2010 GENERAL ELECTION (LIBERAL DEMOCRAT), MR M.SIVARAJAH COUNCIL CANDIDATE FOR 2010 BRANT COUNCIL (LIBERAL DEMOCRAT),MR SURSH HARROW WEST COUNCILLOR (LABOUR), MRS SASIKAL SURSH HARROW WEST COUNCILLOR - LABOUR, MR S.SELVATHURAI (SIVA) CANDIDATE FOR 2010 HARROW WEST COUNCIL ELECTION - CONSERVATIVE) வருகைதந்திருந்ததோடு நினைவுரைகளையும் வழங்கினர்.
இந்த நிகழ்வில் "தமிழினப் படுகொலைகள் -1956-2008" எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த வரலாற்று நூலை மேடையிலேயே அதிகளவான மக்கள் வாங்கிச்சென்றதை காணமுடிந்தது.








0 Responses to லண்டனில் எழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு (காணொளி, படங்கள்)