தமிழக சட்டசபைத் தோ்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் அலி படுதோல்வியைத் தழுவியுள்ளார்.தமிழக சட்டசபையில் கடந்த முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டிருந்த ஹஸன் அலி எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தார்.
அவருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சுமார் முப்பத்து மூன்று வருடங்களாக நெருங்கிய நட்புறவு காணப்படுவதாக அவரே பல தடவைகளில் வாய்விட்டுச் சொல்லியிருக்கின்றார். அது மாத்திரமன்றி அடிக்கடி இருவருக்கிடையிலும் வாழ்த்துச் செய்திகள் பரிமாறப்பட்டுக் கொண்டதும் உண்டு.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கெதிரான உணர்வலைகள் தமிழகத்தில் தீவிரம் பெறும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் அதனை தணிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் இம்முறை நடைபெற்ற சட்டமன்றத் தோ்தலில் அவர் படுதோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



tamilanukku tamil nattil ulla thuroki oruvan entru therinthum seet koduthavanukku venum padutholvi mattrum....pathalasaakkadai