ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையானது இலங்கை எதிர்கொள்ள நோ்ந்திருக்கும் ஒரு சவால் என்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்துகின்றார்.நிபுணர் குழு அறிக்கை மற்றும் அது தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள எதிர்நடவடிக்கைகள் தொடர்பில் சிங்கள வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையின் காரணமாக நாங்கள் சில அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. ஒரு சவாலை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அதனை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. அதே நேரம் அதன் மூலம் பாரியளவான பாதிப்புகள் ஏற்படும் என்று அச்சப்படத் தேவையுமில்லை.
இதன்போது நாங்கள் இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் உண்மைகளை வெளியுலகுக்கு விளக்கமளிக்க வேண்டும். பொய் கூறுவதாலோ, விடயங்களைத் திரித்துக் கூறுவதாலோ எங்களுக்கு சாதகமான முடிவுகள் கிட்டப் போவதில்லை.
உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறினால் இலங்கை எதிர்கொள்ள நோ்ந்திருக்கும் சவால்கள் இலகுவில் முறியடிக்கக் கூடியதாக மாறிவிடும் என்றும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to இலங்கைக்கு சவால் விடும் நிபுணர் குழுவின் அறிக்கை: ஜீ.எல்.பீரிஸ்