Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளர் ரொபோ்ட் பிளேக் இலங்கை அரசாங்கத்திடம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்
அத்துடன் போர் முடிவடைந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இந்த விடயங்களில் இதுவரை காலமும் இலங்கை அரசாங்கம் வழங்கி வந்த உறுதிமொழிகள் யாவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை உள்ளுர் மட்டத்தில் எவ்வாறான பொறுப்புள்ள நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை பார்க்கவேண்டியுள்ளது.

இதேவேளை தமிழர்களின் பிரதான பிரதிநிதியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு உதவும் என தாம் நம்புவதாக பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் அதிகாரப்பகிர்வு தடுப்புக்காவலில் உள்ளோர் விவகாரம் காணாமல் போனவர்களுக்கான மரணச்சான்றிதழ் என்பன முக்கியமானவை என்றும் பிளேக் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஈழத் தமிழர்களின் பிரதான பிரதிநிதிக் கட்சி கூட்டமைப்பு: அமெரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com