Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை என இலங்கை பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில காலமாக அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரான ஜெயலலிதா ஜெயராம் இலங்கை அரசாங்கத்தின் எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

எனினும், முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என அரசியல் விமர்சகர் மொஹான் சமரநாயக்க லக்பிம பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

தமிழகத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜெயலலிதா இவ்வாறு இலங்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்பதனால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com