Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பான் கீ மூனின் . நா. நிபுணர் குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் சிறிலங்கா பாதுகாப்புத்துறை அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேஷியா நாட்டுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவராகப் பெயர் குறிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் உதய பெரேரா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் பிரதம பொறுப்பதிகாரி சாலி கால்லகே, இராணுவத்தின் ஆளணிப் பிரிவு அதிகாரியான சுராஜ் பங்சஜய ஆகியோரே இந்த அறிக்கைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களை விட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்குப் பதிலாக மேலும் இருவரும் இந்த அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர் வன்னி இறுதிப் போரில் சவேந்திர சில்வாவுடன் கடமையாற்றியவர்களே இந்த இருவருமாவர்.

0 Responses to அறிக்கைக்கு பதில் அறிக்கை தயாரிக்கும் இராணுவ தளபதிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com