கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து கொழும்பு சென்று, அங்கிருந்து கனடா செல்லத் தரித்து நின்ற கப்பலில் இருந்து விடுதலைப் புலிகளுக்காக அனுப்பப்படவிருந்த புத்தகங்களை தாம் கைப்பற்றியதாக இலங்கை தெரிவித்துள்ளது. இது குறித்து பல மாறுபட்ட கருத்துகள் வெளியாகி வரும் நிலையில் உண்மை எதுவாக இருக்கும் என நாம் இது குறித்து ஆராய்ந்துள்ளோம். வெளிவரும் விடையங்கள் சூடானவையாக உள்ளது. முதலில் புத்தகங்கள், இந்தியாவில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்து கனடா செல்லும் ஒரு கப்பலில் ஏன் அனுப்பப்படவேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றன. இப் பாதையில் செல்லும் கப்பல் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
விடுதலைப் புலிகளின் புத்தகங்கள் என்று இலங்கை அரசு தெரிவித்தாலும், அது "இனி என்ன செய்யலாம் இதற்காக" என்ற தலைப்பை உடைய ஒரு நூலாகும். அது இன அழிப்பு குறித்து பல தகவல்களையும், புகைப்படங்களையும் உள்ளடக்கிய ஒரு நூல். இதனை தாமே வெளியிட்டதாகவும், கனடாவுக்கு அனுப்பியதாகவும் மனிதம் அமைப்பின் தலைவர் திரு.அக்கினி சுப்பிரமணியம் GTV க்கு வழங்கிய நேர் காணலில் தெரிவித்துள்ளார். ஆனால் விடையமோ வேறு. அவர் அப்புத்தகத்தை வெளியிடவில்லை. மாறாக அப்புத்தகத்தை எழுதிய எழுத்தாளர், திரு.பிரபாகரன் அவர்களை நாம் தொடர்புகொண்டபோது மேலும் அதிர்சி தகவல்கள் சில கிடைத்தது.
ஏப்பிரல் 18ம் திகதியே தாம் புத்தங்களை அக்கினி சுப்பிரமணியம் அவர்களுக்கு தான் கொடுத்துவிட்டதாக எழுத்தாளர் திரு.பிரபாகரன் தெரிவிக்கிறார். மே 18ம் திகதிக்கு அப்புத்தகங்கள் கனடாவை சென்றடையவேண்டும் என்பதே தனது நோக்கமாக இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். ஆனால் மே 17ம் தேதி அப்புத்தகங்களை இலங்கை அரசு கைப்பற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது என்றால் ஏப்பிரல் 18 முதல் அப்புத்தங்கள் எங்கே தரித்து நின்றிருக்கிறது என்ற கேள்விகள் எழுகின்றது. மே 17 கொழும்பில் அப் புத்தகங்கள் இருக்குமாயில், அது எவ்வாறு மறு நாள் கனடாவுக்குச் செல்லும்? கனடா செல்ல குறைந்தது 3 வாரங்களாவது பிடிக்கும்மே.
அதுமட்டும் அல்லாது, குறித்த கப்பலில் பல கண்டேனர்கள் இருந்தபோதும், ஒரு குறிப்பிட்ட கொள்கலனில் தான் இப் புத்தங்கள் இருப்பது இலங்கை அரசுக்கு எவ்வாறு தெரியும் என்ற கேள்விகளும் எழுகின்றது. அதாவது அக் கப்பல் இந்தியாவில் இருந்து இலங்கை சென்றது. இலங்கையில் பொருட்கள் ஏற்றப்பட்டால் அதனை சோதனையிடும் வழக்கம் இலங்கை அரசுக்கு உண்டு, ஆனால் வந்த கப்பலில் ஏறி சோதனை நடத்தவேண்டிய காரணம் என்ன? அப்படியாயின் இலங்கை அரசுக்கு தகவல் கொடுத்தது யார்? இது புத்தகத்தை அனுப்பியவர்ருக்கே வெளிச்சம். இதற்கு நிச்சயம் அக்கினி சுப்பிரமணியம் பதில் கூறியே ஆகவேண்டும் என்கிறார் எழுத்தாளர் பிரபாகரன் அவர்கள். பதில் சொல்லுவாரா அக்கினி?
அதிர்வு
விடுதலைப் புலிகளின் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதா இல்லை காட்டிக்கொடுப்பா?
பதிந்தவர்:
ஈழப்பிரியா
21 May 2011



0 Responses to விடுதலைப் புலிகளின் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதா இல்லை காட்டிக்கொடுப்பா?