இலங்கையில் படையினா தமிழ்கைதிகளை கொலை செய்யூம் வீடியோ காட்சி எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் காண்பிக்கப்படவுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 17 வது அமார்வே எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த வீடியோ காட்சி பிக்ப்த்தானிய செனல் 4 தொலைக்காட்சி அலைவரிசையில் ஒலிபரப்பானது
இந்தநிலையில் இதன் தொழில்நுட்பம் குறித்த அனைத்து உறுதிப்படுத்தல்களையூம் ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான விசேட நிபுணா Christof Heyns மேற்கொண்டுள்ளார்.
எனினும் செனல் 4 வின் காட்சிகளை இலங்கை அரசாங்கம் போலியானது என்றுக்கூறி வருகிறது.
ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடா;பான நிபுணராக Christof Heyns 2010 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பின்னர் அவர் மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கும் முதலாவது அறிக்கை இதுவாகும்.
இந்தநிலையில் 2005 ஆம் ஆண்டு சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான முன்னாள் நிபுணர் Philip Alston இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டில் அந்தப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட Christof Heyns கடந்த வருடம் இலங்கைக்கு வருவதற்கான அனுமதியை கோரியபோதும் அக்கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது.



0 Responses to மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமிழர் படுகொலை காணொளி