Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கின் தமிழ் மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாட இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அழைப்பொன்றை விடுப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

வடக்கில் யுத்தம் நிலவிய பிரதேசங்களில் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறியவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

GTV News

அதன் மூலம் இலங்கை அரசாங்கம் தொடர்பான ஜெயலலிதாவின் எதிர்ப்புணர்வுகளைத் தணிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் தமிழ்நாடு மாநிலத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்பான எதிர்ப்புணர்வுகளைத் தணிப்பதற்கும், அங்குள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை திரும்பவும் நாட்டுக்கு வரவழைப்பதற்கும் அரசாங்கம் தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒத்தாசையைப் பெற்றுக் கொள்ளவும் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to 2ம் இணைப்பு] ஈழத்திற்கு வருமாறு ஜெயலலிதாவை அழைக்க இலங்கை அரசு திட்டம்? - GTV செய்திகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com