Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனீவாவில் இன்று (30) ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 17 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றும் நாடுகளையும், அமைப்புக்களையும் ஏமாற்றும் நோக்கத்துடன் சிறீலங்கா அரசு பெருமளவான பொய்யான தகவல்களுடன் அங்கு களமிறங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் தற்போதைய அமர்வில் இருந்து சிறீலங்கா மீதான அழுத்தங்களை குறைக்கும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

அங்கு சென்றுள்ள சிறீலங்காவின் அமைச்சர் மகிந்தா சமரசிங்கா தலைமையிலான குழுவினர், சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறீலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கமுற்பட்டுள்ளதாகவும், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட பல சிறீலங்கா படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க முற்பட்டுவருவதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாது, சிறிலங்கா அரச குழுவினர் ஜெனீவா புறப்படும் முன்னர் சிறீலங்கா அரசினால் அவசரமாக அமைக்கப்பட்டுள்ள ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவை வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யும் குழு எனவும் விளம்பரப்படுத்த சிறீலங்கா அரசு முற்பட்டுள்ளது.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவாக தாம் ஒரு மனித உரிமை விசாரணைக்குழுவை அமைத்துள்ளதாக அனைத்துலக சமூகத்திற்கு போலியான தகவல்களை வழங்கி கால அவகாசத்தை பெறுவதற்கு சிறீலங்கா அரசு முற்பட்டுள்ளது.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை சிறீலங்கா அரசே விசாரணை செய்யவேண்டும் என்ற ஐ.நாவின் பரிந்துரையை சிறீலங்கா அரசு பற்றிப்பிடித்து ஏமாற்றும் வழியை தேடியுள்ளதாக இது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா அரசின் இந்த பொய்யான பரப்புரைகளை முறியடிப்பதற்கு ஜெனீவாவில் வலுவான எதிர்த்தரப்பினர் இல்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்தியாவின் மறைமுகமாக அழுத்தங்களை தொடர்ந்து ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு செப்ரம்பர் மாத அமர்வுகளுக்கு பிற்போட்டுள்ளது மிகப்பெரும் பின்னடைவானது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா அரசு மீது அதிக அழுத்தங்களை பிரயோகிப்பதாக நாடகம் போட்ட இந்திய அரசு தமிழ் மக்களையும், அனைத்துலக சமூகத்தையும் தந்திரமாக ஏமாற்றி அறிக்கையை பிற்போட்டுக்கதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 Responses to ஜெனீவா கூட்டத்தொடர் – பெருமளவான பொய்களுடன் சிறீலங்கா அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com