Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பேன்: ரணில்

பதிந்தவர்: ஈழப்பிரியா 30 May 2011

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவை விரைவில் சந்திக்க உள்ளதாக, இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்துள்ளார். டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழர் பிரச்சனை குறித்து தம்மை சந்திக்குமாறு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தார். ஜெயலலிதா என்னை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. விரைவில் அவரை சந்திப்பேன்.

இலங்கை பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் அப்போது விவாதிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்கள் கூட்டறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இரு தரப்பும் ஒப்புக்கொண்ட விஷயங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றார்.

0 Responses to ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பேன்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com