Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐநா விசாரணைக் குழு அறிக்கை வந்த செய்தி அறிந்ததும் அரசுக்குச் சாதகமான தமிழர்கள் விசுவாச ஒலி கிளப்பத் தொடங்கி விட்டனர். பிள்ளையான் தலைமையிலான மட்டு நகர் உள்ளாட்சி அமைப்பு ஏற்கனவே அறிக்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டது.

மக்களால் தெரிவு செய்யப்படாத ஆனால் மகிந்த ராஜபக்சவால் எம்பியாக முடிசூட்டப்பட்ட கருணா எதிர்ப்பைக் காட்டுவதில் மிகத் தீவிரமாக இருக்கிறார். வன்னியில் பொது மக்கள் ஒருவரும் கொல்லப்படவில்லை என்று வாய் கூசாமல் இந்தப் பச்சோந்தி அறிக்கை விட்டுள்ளார்.

மே 01 தொழிலாளர் கொண்டாத்திற்கு வடக்கு கிழக்கு பொது மக்களைத் துவக்கு முனையில் ஒன்று திரட்டி கொழும்குக்குக் கூட்டிச் சென்று ஐநாவுக்கும் அறிக்கைக்கும் எதிராகக் கோசமிடும்படி கருணா மிரட்டுகிறார்.

மட்டக்களப்பு வாசிகள் ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டுள்ளனர். அதில் கருணாவுக்கு எதிரான கண்டன வாசகங்கள் முக்கியமாக இடம் பெறுகின்றன. ராஜபக்ச குடும்பத்திற்கு உன்னுடைய விசுவாசத்தைக் காட்டுவதற்கு வேறு வழியில்லையா என்ற கேள்வி இந்தப் பிரசுரத்தின் மூலம் கேட்கப்படுகிறது.

சூடு சுரணை இல்லாத கருணா இதுக்குப் பயப்படமாட்டார். 25 படைவீரர்கள் அவருக்கு இரவு பகலாகப் பாதுகாப்பு வழங்குகின்றனர். கொழும்புத் தெருக்களில் அவர் வாகனத் தொடரணியில் பவனி வரும் கண்கொள்ளாக் காட்சி அவரை மாத்திரம் மகிழ்விக்கின்றது.

வடக்கில் கருணாவுக்க நிகரான இன்னொரு பச்சோந்தி களத்தில் இறங்கிவிட்டார். இரட்டை முகவராக இருந்த அவர் இப்போது ஒற்றை முகவராக மாறி விட்டார். கே.பி என்ற சிங்கள அடிவருடி ஐநா அறிக்கையைக் கண்டித்துப் பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டுள்ளார்.

யார் கூடுதலாக மகிந்த அரசுக்கு அதிக விசுவாசம் காட்டுவது என்ற கடும் போட்டி கருணாவுக்கும் கேபிக்கும் இடையில் நிலவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கேபியும் படுக்கை நோய்களால் பாதிக்கப்பட்ட கருணாவும் உடல் மெலிந்துள்ளனர். ஆனால் சிங்கள அரசுக்கு வழங்கும் விசுவாசம், நன்றி, சோற்றுக்கடன் ஆகியவற்றில் இருவரும் சமபலத்துடன் இருக்கின்றனர்.

0 Responses to போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சாவின் முதுகைச் சொறியும் தமிழர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com