Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்வதற்காகப் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வெசாக் அட்டைகளை தமிழ் மக்களுக்கு விற்பனை செய்து கொழும்புக்கு அனுப்ப வேண்டும் என பிரதேச செயலாளர்களுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், வெசாக் வாழ்த்து அட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலையில் பிரதேச செயலகக் கலாசார உத்தியோகத்தர்கள் திண்டாடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கலாசார அமைச்சின் கீழ் உள்ள கலாசார அலுவல்கள் திணைக்களம் கிராமிய மாவட்ட கலாசார சபைகளின் செயல்திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் ரூபா வருமானத்தை ஈட்டும் பொருட்டு வெசாக் வாழ்த்து அட்டைகளை விற்பனைக்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்துள்ளது.

பெரும் இழப்புகளைச் சந்தித்த துயரில் இருந்து இன்னமும் மீளமுடியாத நிலையில் உள்ள தமிழ் மக்கள் தமது முக்கிய கொண்டாட்டங்களுக்கான வாழ்த்து அட்டைகளைக்கூட தமது உறவுகளுக்கு அனுப்பாத நிலையில் இருக்கும் போது சிங்கள மக்களுக்குரிய வெசாக் அட்டைகளை எப்படி யாருக்கு விற்பனை செய்ய முடியும் என யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

0 Responses to வெசாக் அட்டைகளை தமிழ் மக்களுக்கு விற்குமாறு இமெல்டா சுகுமார் உத்தரவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com