Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். படைகளின் கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவை காப்பாற்றும் முயற்சியில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்

மஹிந்த ஹத்துருசிங்க, தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து மாதாந்தம் கொடுப்பனவை பெற்று வந்தார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையின் போதே சரத் பொன்சேகா இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.

எனினும் இதனை மறுத்துள்ள கோட்டாபய ராஜபக்ச 30 ஆயிரம் என்ற சிறிய தொகை பணத்துக்காக ஹத்துருசிங்க படையினர் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தகவல்களை வழங்கியிருப்பாரா என்பதை தம்மால் நம்பமுடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

1990 ஆண்டுக்காலப்பகுதியில் கோட்டபாய ராஜபக்ச லெப்டினன்ட் கேணலாக இருந்த போது, ஹத்துருசிங்க அவரின் கீழ் பணியாற்றியவராவார்.

மேஜர் ஹத்துருசிங்க இராணுவ பெண் அதிகாரியை ஒருவரை மணந்துக் கொள்வதாக பொய்க்கூறி, அவர் கர்ப்பமாக காரணமாக இருந்தார்.

அந்தவேளையிலும் கோட்டாபய ராஜபக்ச ஹத்துருசிங்கவை காப்பாற்றியதாக இராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக லங்காவெப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to தளபதி ஹத்துருசிங்கவை காப்பாற்றும் முயற்சியில் கோத்தபாய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com